மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் டாப் இடத்தைப் பிடித்து வருகிறது.
இந்த சீரியலில் கோபி தற்பொழுது தனது 25 வருட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனது காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சந்தேகத்துடன் இருந்து வரும் பாக்கியா ராதிகா யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என திட்டமிடுகிறார்.
அதனை எப்படியோ ஒட்டு கேட்ட கோபி ராதிகாவை சந்திக்க கூடாது என்பதற்காக கோபியின் அப்பாவான ராமமூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.எனவே குழந்தைகளுக்கு சமைக்கும் ஆர்டரை எடுத்த பாக்கியா தனது வீட்டு வேலைக்காரி செல்வியிடம் எடுத்துக் கொடுத்து இதனை ஆசிரமத்திற்கு சென்று ராதிகாவிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
கோபியும் ராதிகாவும் ஒன்றாக அந்த ஆசிரமத்தில் இருப்பதால் செல்வியையும் உள்ளே வரவிடாமல் ஆசிரமத்தின் நிர்வாகியிடம் பேசிவிட்டு செல்வியையும் உள்ளே விடாமல் திரும்ப வீட்டிற்கு அனுப்பி விடுகிறான்.எனவே செல்வியும் ராதிகா திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்து கொள்ள வேண்டும் என தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில் எப்படியோ கோபி தனது வில்லத்தனமான யோசனையினால் எப்படியோ அனைத்திலிருந்தும் தப்பித்து வருகிறான்.
எத்தனை முறை கோபியை பற்றி பாக்கியாவிடம் செல்வி கூறினாலும் செல்வியை திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கோபி மற்றும் ராதிகாவிற்கு இடையே இருக்கும் தகாத உறவை பற்றி விரைவில் தெரிந்து கொள்வார் பாக்கியா அப்போதுதான் பாக்கியாவிற்கு செல்வி சொன்னதெல்லாம் உண்மைதான் என்று தெரியவரும்.