விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பல திருப்பங்கள் நடைபெற்று வரும் இந்த சீரியலில் சமீப காலங்களாக பாக்யாவின் கணவர் கோபி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய காதலியான ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
எனவே பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் வாங்க உள்ளார் அதற்கு பாக்கியவும் எந்த கேள்வியும் கேட்காமல் கையெழுத்து போட.. உடனே கோபி என்னா இந்த பேப்பர் என்று இதனை பற்றி எதுவும் கேட்கவில்லையே என்று கேட்ட பாக்கிய அதற்கு நீங்கள் எது செய்தாலும் எனது நல்லதுக்காக தான் இருக்கும் என்று கூற கோபி உடனே கண் கலங்குகிறார் இந்த எபிசோடு தான் என்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோபியின் அப்பா மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பக்கவாதம் ஏற்பட்டு உள்ளது எனவே மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் கூறியதால் சமீப காலங்களாக பிசியோதெரபி மருத்துவர் கோபியின் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளித்து வருகிறார். அந்த மருத்துவரின் பெயர் ரஜினி இவருடைய பேச்சி மற்றும் ஸ்டைல் போன்றவை கோபியின் மகள் இனியாவிற்கு பிடித்து விடுகிறது.
எனவே ரஜினி வீட்டிற்கு வரும்பொழுது எல்லாம் இனி அத்தனை அழகு படுத்திக்கொண்டு ரஜினி வருவதற்காக காத்து இருக்கிறார். அந்தவகையில் ரஜினியை பிசியோதெரபி பணியை செய்யவிடாமல் இனியா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறாள் எனவே இவளைப் பார்க்க வித்தியாசமாக நடந்து கொள்வதால் ஜெனி பார்த்துவிடுகிறார்.
எனவே ஜெனி இனியாவை அந்த ரூமில் இருந்து வெளியே போக பல முயற்சிகளை செய்கிறார் ஆனால் இனியா தொடர்ந்து ரஜினியுடன் பேசுவதை நிறுத்தவில்லை. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதற்கு மேல் இனியா மற்றும் ரஜினி இவர்களின் காதல் ஜோடியை வைத்துதான் அடித்த எபிசோடுகள் இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
இனியா மற்றும் ரஜினி இவர்களின் காதல் ஜோடியை வைத்து ரசிகர்கள் மிகவும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். ஏனென்றால் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து வரும் இனியாவிற்கு தற்பொழுதே காதல் ஜோடியா அப்பாவுக்கு பொண்ணு தப்பாம இருக்கு என்று கூறி வருகிறார்கள்.