களத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி குழுவினர்கள்.! பொதுமக்களின் கருத்து.

bhakiya lakshmi

கோடிக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் விஜய் தொலைக்காட்சி இப்போ நேராக களத்தில் இறங்கி பாக்கியலட்சுமி நாடகத் தொடர் எப்படி இருக்கு?? அதுல யாரெல்லாம் உங்களுக்கு பிடிக்கும் ?? அப்படின்னு சொல்லி மக்களிடையே கருத்து கேட்கின்றனர்.

அதற்கு மக்கள் அனைவரும் பொதுவாக ஒரு கருத்தினை முன் வைக்கின்றனர்,”பாக்கியா மிகவும் அப்பாவி அவரது கணவன் மிகவும் சரி இல்லை,கணவனே உலகம் என்று இருக்கும் பாக்கியாவை கணவன் கோபி ஏமாற்றுகிறார் இது மிகவும் தவறு என்று அனைவரும் பொதுவாகவே கூறுகின்றனர்”.

மேலும் கருத்து கேட்க சென்றவர்கள் இந்த தொடரில் உங்களுக்கு யாரையெல்லாம் பிடிக்கும் என்று மக்களிடம் கேட்கும் பொழுது மக்கள் “எனக்கு எல்லோரையும் பிடிக்கும் கோபியை தவிர” என்று கூறுகின்றனர். கோபி தன்னை உலகமாக நினைத்து இருக்கும் மனைவியை ஏமாற்றி விட்டு தான் முன்பு காதலித்த ஒரு பெண்ணையே இரண்டாவது திருமணமாக செய்து கொள்ள விரும்புகிறார்.

இதை அறிந்த கோபியின் தந்தை இதிலிருந்து எப்படியாவது கோபியை மாற்றிவிட வேண்டும் என்று முன்புறமாக உள்ளார். கோபியிடம் “அவரது தந்தை நீ இவ்வாறு செய்வது சரியில்லை மரியாதையாக ஒழுங்காக இரு” என்று கூறுகிறார்.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரது முன்னாள் காதலியின் வீட்டிற்கு மீண்டும் அடிக்கடி சென்று வருகிறார்.

இந்த கதையில் காதலிக்கு ஒரு குழந்தையும் உண்டு. கோபி இவ்வாறு செய்வதால் மக்களிடையே கோபி பிடிக்காதவராக மாறிவிட்டார், அம்மா என்றால் அதற்கு அடையாளம் பாக்கியாதான் என்று கருத்துகேட்பில் பலர் கூறுகின்றனர்.