விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தை ஓரம்கட்டிய பாக்கியலட்சுமி சீரியல்.! அட, இருந்தாலும் இது ஓவருப்பா எழிலு.! இதுக்கு சிம்புவே பரவாயில்ல போல.

yezhil
yezhil

குடும்ப கதையை மையமாக வைத்து ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் குழந்தை நட்சத்திரம் முதல் முதியவர்கள் வரைவுள்ள  அனைவரையும் கவர்ந்துள்ளது.அந்த வகையில் மிகவும் முக்கியமாக தனது அம்மாவிற்காக மகன் எப்படி எல்லாம் உதவி செய்கிறான் எவ்வளவு பாசமாக பார்த்துக் கொள்கிறான் என்பது தாய்மார்களின் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

இவ்வாறு தனது மகன்களை நினைத்து பெருமைப்படும் அளவிற்கு எழில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் இந்த சீரியலில் கணவர், மாமியார்,மகள்,பெரிய மகன் என அனைவரும் மிகவும் தரக்குறைவாக நடத்தி வருகிறார்கள் ஆனால் எழில் மட்டும் தனது அம்மாவை எந்த இடத்திலும் குறை சொல்லாமல் விட்டு கொடுக்காமல் இருந்து வருகிறான்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் 25 வருடம் வாழ்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளான் கதாநாயகன் கோபி.

இவ்வாறு இதனை அறிந்துகொண்ட கோபியின் அப்பா கோபியை கொலை செய்வதற்காக முயற்சி செய்கிறான். இதனைத் தொடர்ந்து எழில் தனது முதல் திரைப்படம் ரிலீஸ்சான நிலையில் தனது அப்பாவை கையெடுத்து கும்பிட்டு நீங்கள் வரவேண்டாம் என கூறி விட்டான்.

பிறகு தனது அம்மா,பாட்டி என அனைவரையும் தியேட்டருக்கு அழைத்து செல்கிறான் அவர்களுடன் அமிர்தாவின் குடும்பத்தையும் வரவழைத்துள்ளார். ஏற்கனவே எழில் அமிர்தாவை காதலித்து வரும் நிலையில் அமிர்த்தாவும் வகொஞ்சம் கொஞ்சமாக எழிலின் காதலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளால்.

அந்தவகையில் எழில் இத்திரைப்படத்தில் அமிர்தாவின் காதலைத் தூண்டும் வகையில் ஏராளமான காட்சிகள் இடம்பெறும் வகையில் இயக்குகிறான். எனவே அமிர்தாவும் இன்னும் சில காலங்களில் எழிலிடம் தனது காதலை கூற உள்ளார்.

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிசாவின் காதலே உங்கள் காதலுக்கு முன்பு தோற்றுவிட்டதாக எழில் மற்றும் அமிர்தாவை வைத்து பல கமெண்டுகளை கூறி வருகிறார்கள்.