தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் பவர் தளபதி விஜய் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் எந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறாரோ அதே அளவிற்கு விஜய் சேதுபதியும் தனது வில்லத்தனத்தை பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
இவ்வாறு இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்தால் இருதரப்பு ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வந்தார்கள். இப்படம் உலக அளவில் பாராட்டப்பட்டது.
இப்படம் ரிலீஸ் ஆகி உலகளவில் ரூபாய் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் வேட்டையை அடைந்தது. தற்போது தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய அம்சம் என்றால் யூட்யூப் தளத்தில் சேர்ந்த பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான வாத்தி காமிங் பாடலில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நடித்துவரும் விஷால் அந்தப் பாட்டில் நடித்துள்ளார். இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.