இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மகா வில்லனாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருபவர் தான் நடிகர் சதீஷ்குமார். இவர் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் திரைப்படங்கள் சொல்லுமளவிற்கு அவருக்கு பெரிதாக பிரபலத்தை தராத காரணத்தினால் சமீபகாலங்களாக சீரியலில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சதீஷ் கோபி என்ற கேரக்டரில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்பொழுது கோபி தனது மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை செய்து வருகிறான். ஒரு நாள் ராதிகாவை பார்ப்பதற்காக ராதிகாவின் வீட்டிற்கு சென்றிருந்த கோபி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பாக்கிலக்ஷ்மியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
எனவே இதன் காரணமாக எப்படியாவது ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி இருவருக்கும் இடையே இருக்கின்ற நட்பை உடைக்க வேண்டும் என்று பிளான் செய்து போட்டுக் கொண்டிருக்கிறான். அந்தவகையில் ராதிகாவிடம் பாக்யாவின் வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் இருந்து நாம் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு போய் விடலாம் என்று கூறுகிறான்.
ஆனால் ராதிகா எதற்கு சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறுகிறாள். பிறகு கோபி பல காரணங்களை கூறி ராதிகாவின் மனதை மாற்றிவிட்டன் எனவே ராதிகாவும் வேறு ஒரு வீட்டிற்கு போய் விடலாம் என்று முடிவு செய்துவிட்டார்.
எனவே இந்த எபிசோடுகளை பார்த்து வரும் ரசிகர்கள் கோபியை உலகமகா நடிகன் டா சாமி எனக்கூறி பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு கோபிக்காக அனைத்தையும் செய்து வரும் ராதிகாவிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவர எனது இரண்டாவது திருமண வாழ்க்கையையும் விடக்கூடாது என்ற எண்ணத்தில் பாக்யாவிற்கு வில்லியாக மாறப் போகிறார்.