டிஆர்பி-யில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களும் மெகா சங்கமமாக நடக்க இருக்கும் நிலையில் அதில் பல திருப்பங்களுடன் கதையை மாற்றுவதற்கான சூழல் அமைகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த காட்சிகளை எதிர்பார்த்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்துவரும் தில்லுமுல்லு செயல்கள் அனைத்தும் அனைவருக்கும் தெரிவதுபோல் அதிரடி காட்சிகள் நடக்க இருக்கிறது. ஆனால் இது யார் மூலம் தெரியவரும் என்பது மக்கள் மனதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இத்தனை முறைகளும் தப்பித்து வந்த கோபி இனிமே தப்புவதற்கு வழியே இல்லை கையும் களவுமாக சிக்க இருக்கிறார். கோபி தாத்தாவின் நாளுக்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை அழைத்து வர இருக்கிறார். பாக்கியா+முல்லையும் குழந்தை விஷயத்தில் வருத்தமாக இருப்பதால் வெளியில் சென்று வந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து பாக்கியா வீட்டிற்கு சென்று வரலாம் என்று நினைக்கிறார்.
தனம் இந்த காட்சிகள் மீண்டும் ஒரு மெகா சங்கமமாக வர உள்ளது கடந்த முறை நடந்த மெகா சங்கமம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் முறையும் பல காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்கியா வீட்டிற்கு சென்றபோது மூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் கோபி அறையில் தான் தூங்குவதற்கு செல்கின்றனர். ஆனால் இரவு முழுவதும் ராதிகாவிடம் இருந்து கோபிக்கு மெசேஜ் மற்றும் கால் வருவதை கண்ணன் கவனித்து விடுகிறார்.
ஏதோ தவறு செய்கிறார் என்று புரிந்து கொள்கிறார். அதேபோல் தாத்தாவின் பிறந்த நாளன்று ராதிகா வரும்போது கோபி வெளியில் சென்று விடுகிறார். இதையெல்லாம் கவனித்து விட்டு ராதிகாவிற்கும் கோபிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக கண்ணன் கணித்து விடுகிறார். இதையெல்லாம் கண்ணன் ராதிகாவிடம் கூற இருப்பதாக காட்சிகள் வர உள்ளது.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான், என்பதைப்போல் கோபியின் சுயரூபம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினால் வெளிவருவது போல் இனிவரும் எபிசோடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.