மீண்டும் ஜெயிலுக்கு போன வெண்பா.! இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரேகா..

reka
reka

கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் பல சுவாரசியமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் டிஆர்பி-யின் கடைசியில் இருந்த பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சுவாரசியமான காட்சிகளும் இடம்ப்பெற்று வருகிறது.

இந்த சீரியலின் பயங்கர வில்லியான வெண்பாவின் ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காக வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகாவை வெண்பாவின் அம்மாவாக களமிறக்கி உள்ளார்கள். இவர் சர்மிளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் இந்த சீரியலில் வந்த பிறகுதான் பல திருப்பங்கள் இருந்து வருகிறது.

ஏனென்றால் யாருக்கும் அடங்காமல் இருந்து வந்த வெண்பா தனது அம்மாவைப் பார்த்து பயந்து அடங்கி ஒடுங்கி கிடைக்கிறாள். இதனைத் தொடர்ந்து சௌந்தர்யாவின் நண்பர் விக்ரம் என்ற கதாபாத்திரமும் புதிதாக அறிமுகமாகிவுள்ளது இவர் புதிதாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார் அதற்கு திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது இந்த மருத்துவமனையில் கண்ணம்மா வேலை பார்க்கிறாள்.

எனவே இந்நிகழ்ச்சிக்கு வெண்பாவும் அவரது அம்மா ஷர்மிளா இருவரும் வருகிறார்கள். அங்கு வந்து அனைவரிடமும் பாரதி, வெண்பா மற்றும் அவரது அம்மாவை அறிமுகம் செய்து வைக்கிறார்.  பிறகு சௌந்தர்யாவும் ஷர்மிளாவும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொழுது ஷர்மிளா வெண்பாவிற்கு  திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் தான் வந்துள்ளேன் என கூறுகிறார்.

சௌந்தர்யாவும் ரொம்ப நல்ல விஷயம் நல்ல மாப்பிள்ளைய பார்த்த உடனே கல்யாணத்த பண்ணுங்க. நல்லமா படிச்ச மாப்பிள்ளையா பாருங்க ஏற்கனவே கல்யாணமான பையன், விவாகரத்தான பயம் வேண்டாம் என்று சௌந்தர்யா  மறைமுகமாக கூறுகிறாள்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று போலீசார் அங்கு வந்து வெண்பாவை அழைத்து செல்ல முற்படுகின்றனர். அதற்கு ஷர்மிளா ஏன் எனது மகளை அரெஸ்ட் பண்றீங்க என கேட்கிறார். பெயில தான் இவங்க வெளியில இருக்காங்க இப்போ பெயில் கேன்சல் ஆயிடுச்சு எனவே மீண்டும் வெண்பாவை ஜெயிலில் போட ஆர்டர் வந்து இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.

பிறகு வெண்பாவையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது வெண்பாவின் அம்மா ஷர்மிளா உன்னை நான் பெயில் எடுக்குறேன் அதற்கு ஒரு கண்டிஷன் என கூறுகிறார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இவர் உன் கல்யாணத்துல நான் சொல்றதுதான் நீ கேக்கணும் என கூறுகிறார் உடனே வெண்பா பாரதி என சொல்ல ஆரம்பிக்க வாய மூடு என கூறுகிறார்.

இதற்கு மேல பாரதி என்ற பேச்சே இருக்கக்கூடாது நீ பிடிவாதக்காரனா நா அகம்பாவக்காரி என மிகவும் கோபத்துடன்  பேசுகிறார் எனவே இதனை பார்த்து அரண்டு போகிறார் வெண்பா இதனை  பார்த்தால் விரைவில் வெண்பாவிற்கு வேறொருவனுடன் திருமணமாகும் என்று கூறப்படுகிறது.