சௌந்தர்யாவின் நண்பர் தான் வெண்பாவின் அப்பாவா.! குழப்பத்தில் ரசிகர்கள்.!

bharathi kannama 3
bharathi kannama 3

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்துவரும் நிலையில் புதுபுது நடிகர்-நடிகைகளும் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெண்பாவின் அம்மாவாக நடிகை ஷர்மிளா என்றி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெண்பாவின் அப்பா விக்ரம் என்று தெரியவர பாரதி பெரிய அதிர்ச்சியில் இருந்து வருகிறான்.

சுமார் ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் எப்படி சேர்வார்கள் என்பதை நோக்கி தற்போது இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக கண்ணம்மாவின் மீது பொய்யான பழியை போட்டு தற்பொழுது இருவரையும் பிரித்து வைத்திருக்கிறார்.

அதோடு தொடர்ந்து எப்படியாவது பாரதியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என பல திட்டங்களை தீட்டி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெண்பாவிற்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற குறிக்கோளோடு ஷர்மிளா வந்துள்ளார்.

ஆனால் பாரதிக்கு வெண்பாவின் மீது காதல் இல்லாத காரணத்தினால் வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளார். எனவே வெண்பா தற்போது தனது அம்மாவின் பேச்சை மீறாமல் இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சௌந்தர்யாவின் நண்பனாக அறிமுகமாகியிருந்த விக்ரம் கதாபாத்திரம் யார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தார்கள்.

அதோட இன்னும் சிலர் இவர்தான் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்றும் கூறிவந்த நிலையில் தற்பொழுது வெண்பாவின் அப்பாவாக இந்த கதையை கொண்டு செல்ல இருக்கிறார்கள். எனது வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக ஷர்மிளா முயற்சி செய்யும் வகையில் விக்ரமும் இவர்களுடன் இணைந்து உதவப் போகிறார்.