இனியா 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் அடுத்த வருடம் பிளஸ் டூ என்பதால் நீ நன்றாக படிக்க வேண்டும் என ராதிகா சண்டை போடுகிறார் அதுமட்டுமில்லாமல் எப்ப பாரு போனையே நோண்டிக்கிட்டு இருக்க நீ படிப்பது கிடையாது என ராதிகா இனியாவிடமிருந்து போனை பிடுங்கிக் கொள்கிறார். ராதிகா உடனே கோபியிடம் நான் செய்வது சரிதானே கோபி என கூற கோபியும் ஆமாம் ராதிகா என பூம்பூம் மாடு போல் தலையாட்டுகிறார்.
இதை அனைத்தையும் ராமமூர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே ராமமூர்த்தி எழுந்து நின்று அவ செய்வதுதான் சரி இதையெல்லாம் நீ தான் கேட்க வேண்டும் கோபி ஆனா நீ எதுவுமே கேட்கல அவ செய்வது தான் சரி இதுவே பாக்கியாவாக இருந்தால் இதை தான் செய்வாள் என ராமமூர்த்தி ராதிகாவிற்கு வக்காலத்து வாங்குகிறார் அதனால் இனியா நீங்களும் அவங்களுக்கு தான் சப்போர்ட் செய்கிறீர்கள் இதெல்லாம் கேட்க அவங்க யார் என தாத்தாவிடம் இனி நான் கேட்க நல்லது யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என இனியாவிற்கு தாத்தா அறிவுரை கூறுகிறார்.
இந்த நிலையில் கோபி மற்றும் இனியா இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து நிற்கிறார்கள். ஏனென்றால் ராமமூர்த்தி ராதிகாவிற்கு சப்போர்ட் செய்து பேசியது இவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உடனே இனிய காலையில் எழுந்து படிக்கிறேன் என கூறிவிட்டு படுத்து கொள்கிறார். அந்த பக்கம் பாக்கியலட்சுமி தனக்கு கொடுத்த அனைத்து ஆர்டர்களையும் கச்சிதமாக முடித்து விட்டார். பாக்கியா சாமைக்கும் மண்டபத்திற்கு ஏழில் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே எழில் பசிக்கிறது என தன்னுடைய அம்மா பாக்யாவிடம் கேட்க உடனே பாக்யா சாப்பாடு போட்டு கொடுக்க எழில் சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டி விட்டு பாக்யாவிற்கு ஊட்டி விடுகிறார் பின்பு அமிர்தாவுக்கும் ஊட்டி விடுகிறார் அப்பொழுது செல்வி கிண்டல் செய்ய செல்விக்கு ஊட்டி விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பின்பு அதே நேரத்தில் ஜெனி நிலா பாப்பாவை தன்னுடைய ரூமிற்கு கொண்டு வருகிறார் அங்கு செழியன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஜெனி பாப்பாவிடம் பெரியப்பா என்று சொல்லு என நிலாவுக்கு ஜெனி சொல்லிக் கொடுக்க கடுப்பாகி செழியன் எனக்கு தூக்கம் வருகிறது முதல்ல வெளியே கூட்டிட்டு போ என ஜெனியை திட்டுகிறார் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜெனி நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது திடீர் என்று ஜெனியின் அம்மா போன் செய்கிறார்.
உடனே பாப்பாவை பார்த்துக்கொள் நான் வெளியே போய் பேசி விட்டு வருகிறேன் என வெளியே செல்கிறார். நிலா பாப்பா செழியனை பார்த்து பெரியப்பா பெரியப்பா என கூற செவியனின் மனம் மாறுகிறது அதுமட்டுமில்லாமல் நிலா பாப்பா செழியனுக்கு முத்தம் கொடுக்கிறது அதனால் செழியன் அப்படியே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில்நிலா பாப்பாவை செழியன் தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் பொழுது ஜெனி உள்ளே வருகிறார் உடனே நிலா பாப்பாவை செழியன் தூக்கி கொடுத்து கூட்டிக்கொண்டு போ என கூறுகிறார்.
ஆனால் ஜெனி விடாமல் பெரியப்பா உன்னிடம் பேசினாரா என கேட்டு கொண்டிருக்கிறார் நிலவிடம் அதற்கு நிலா ஆமாம் எனக் கூற செழியன் தூங்குவது போல் நடிக்கிறார். அந்த பக்கம் ராதிகா இனியாவை திட்டிக்கொண்டு ஃபோனை பிடுங்கி வைத்துக் கொண்டு நாளை வரைக்கும் இந்த ஃபோனை நீ எடுக்கவே கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
இதைப் பார்த்த இனியா இதையெல்லாம் கேட்க நீங்க யார் எனக்கே கேட்க. உடனே ராதிகா நீ அங்கே இருந்தால் ஒரு பிரச்சனையும் கிடையாது இங்கு இருக்கிற வரைக்கும் நீ நல்லா படிச்சு தான் ஆகணும் அப்படி படிக்கலைன்னா உங்க அம்மா என்கிட்ட ஏதாவது கேட்டா மார்க்கு ஏன் குறைந்தது என்று கேட்டால் நான் என்ன கூற முடியும் என ராதிகா கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த நேரத்தில் படிப்பு மட்டும்தான் முக்கியம் அதில் கவனம் தேவை என அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்.
இப்போ உனக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் இதை தான் உங்க அம்மாவும் சொல்லுவாங்க நாளைக்கு உங்க அம்மா கூட என்கிட்ட வந்து எதுக்கு இனியா மார்க் கம்மியான என்று என்கிட்ட கேட்பாங்க என கூற உடனே இனியா நீ ஒன்னும் என் அம்மா கிடையாது என்று சொல்ல இங்க இருக்கிற வரைக்கும் நான் உன் அம்மா மாதிரி தான் இருப்பேன் என கூறி கோபி முன்னாடியே இனியவை திட்டி படிக்க சொல்கிறார் உடனே இனியா டாடி இவங்க ஏன் என்ன கண்டிஷன் எல்லாம் போட்டுக்கிட்டு இருக்காங்க எனக் கூற நான் பார்த்துக் கொள்கிறேன் நான் பேசிக் கொள்கிறேன் என கோபி இனியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.
கோபியின் இந்த செயலை பார்த்த ராமமூர்த்தி கோபியை திட்டி தீர்க்கிறார் ராதிகா கேட்டது தான் சரி நீ பண்ண வேண்டிய வேலையை அவ பண்ணிக்கிட்டு இருக்கா என ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து ராமமூர்த்தி பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் இனியாவே உனக்கு இங்கு இருக்க கஷ்டமா இருக்கு என்றால் சொல்லு நம்ம வீட்டுக்கு போய்விடலாம் என கூறிவிட்டு ராமமூர்த்தி மையூ வா நம்ம மொட்டை மாடிக்கு போவோமென கிளம்பி விடுகிறார் உடனே கோபியிடம் இனியா தாத்தாவும் ரொம்ப மாறிட்டாங்க எனக் கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருக்கிறார்.
அதிகாலையில் ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டு படிக்கலாம் என கூறிவிட்டு இனிய எழுந்தரிக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார் அதை பார்த்த ராதிகா அவரை எழுப்பி விடுகிறார் உடனே நீ போய் ரெபரஸ்ட் ஆயிட்டு வா உனக்கு குடிக்க ஏதாவது கொண்டுவரேன் என கூறிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார். எல்லாரும் என்னை திட்டிக்கிட்டு இருக்கிறீர்கள் என புலம்பி கொண்டிருக்க . உடனே ராமமூர்த்தி ராதிகா சொல்வது தான் சரி நீ ராத்திரி உங்க அப்பாகிட்ட காலையில் படிக்கிறேன் என்று கூறினாய் இப்போ உட்கார்ந்து படி என கூறுகிறார்.
அடுத்த நாள் காலையில் பாக்யா அமிர்தா ஜெனி செல்வி என அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.