விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் இதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ஜெனி, அமிர்தா செல்வி என அனைவரும் திருமண ஆர்டரை முடித்த பிறகு கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது காய்கறிக்கு பணம் கொடுத்தாச்சா மளிகை சாமானுக்கு பணம் கொடுத்தாச்சா என பாக்யா கேட்க ஜெனி மற்றும் அமிர்தா பதில் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தாத்தா அங்கு வருகிறார்.
தாத்தா வந்தவுடன் பாக்கியா வாங்க மாமா என்ன கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் தாத்தா ரொம்ப நாளா உன்ன பாக்கவே முடியல எனக் கூறுகிறார் உடனே பாக்கியா தொடர்ந்து சமையல் ஆர்டர் இருந்ததால் சரியாக கவனிக்க முடியவில்லை எனக் கூறுகிறார். பின்பு பாக்யா மாமா உங்களுக்கு தோசை சுட்டு எடுத்துக் கொண்டு வரவா என கேட்க, வேண்டாம் என தாத்தா கூறுகிறார் உடனே காபி டீ ஏதாவது போட்டுக் கொண்டு வருகிறேன் என கூறுகிறார் உடனே அமிர்தா நான் காபி போட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன் என எழுந்திருச்சு போகிறார்.
ஜெனி அமிர்தா டீ சூப்பராக போடுவார் என கூறுகிறார் உடனே தாத்தா உன்னைய விடவா ஜெனி என கூற தாத்தா என ஜெனி முறைக்கிறார். அமிர்தா டீ கொண்டு வந்து தாத்தாவிடம் கொடுக்க அதைக் குடிக்க போகும் பொழுது ஈஸ்வரி அங்கு வந்து வந்தீங்கன்னா ஒரு வார்த்தை கூப்பிட மாட்டீங்களா இங்க உட்கார்ந்து அரட்டை அடிச்சுக்கிட்டே இருக்கீங்க என கேட்கிறார் அதற்கு அமிர்தா பாட்டி உங்களுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வரட்டா என கேட்க ஈஸ்வரி உன்னுடைய டீயை குடிக்கிற நிலைமை வந்துடுச்சுன்னா இந்த வீட்டிலேயே இருக்க மாட்டேன் என கூறுகிறார்.
அவர் கூறியதும் அமிர்தா உள்ளே செல்கிறார் அவரை பின்தொடர்ந்து ஜெனியும் செல்கிறார் பின்பு ஈஸ்வரியும் செல்கிறார். அடுத்த காட்சியில் ராதிகா தனக்கு மேல் இருக்கும் அதிகாரி கூப்பிட்டார் என போக அங்கு நம்மளுடைய ஆபீஸில் கேட்டரிங் ஆர்டரில் பெரிய மிஸ்டேக் நடந்து விட்டது ஃபுட் பாய்சன் ஆகிவிட்டார்கள் எனக் கூறிக் கொண்டிருக்க ராதிகா நாம அடுத்த டைம் சரியாக பார்த்து கொடுக்கலாம் சார் என கூறிக் கொண்டிருக்கிறார் அதற்கு அதிகாரி நாம பேசாம பாக்கியா என்ற லேடிக்கே ஆர்டரை கொடுத்து இருக்கலாம் என கூறுகிறார்.
அதற்கு ராதிகா அவங்க மட்டும் எப்படி நல்லா சமைப்பாங்கன்னு நினைக்கிறீங்க அவங்களும் ஏதாவது ஃபிராடு பண்ணுவாங்க எனக் கூற அதற்கு ராதிகாவின் அதிகாரி லேடி சமைத்தால் சாப்பாடு நன்றாக இருக்கும் அவங்க சாப்பிட்ட உடனே சாப்பாடு நல்லா இருக்கு என்று கூற தான் ஆசைப்படுவார்கள் ஆனால் அவர்கள் எதையும் சாப்பாட்டில் கலக்க மாட்டார்கள் பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை எதுவும் இருக்காது அதனால் நல்லா சமைத்து தருவார்கள் என கூறுகிறார்.
உடனே ராதிகா அதெல்லாம் வேணாம் சார் ஒரு டைம் தவறு நடந்துருச்சு அதனால் மறுபடியும் டெண்டர் விடுவோம். அதுல யார் வராங்களோ அவங்க கிட்ட பார்த்து கொடுப்போம் என கூறுகிறார். அதற்கு ராதிகாவின் அதிகாரி போன டைம் நம்ம நல்லா விசாரிச்சு தான் கொடுத்தோம் உங்களால தான் பாக்கியாவிற்கு ஆர்டர் கொடுக்கல என கூறுகிறார்.
அதற்கு ராதிகா டெண்டர் கொடுத்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டு செல்வதற்கு முயல்கிறார் அப்பொழுது ராதிகாவின் அதிகாரி உங்களுக்கும் பாக்கியாவிற்கும் ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார் இல்லை என கூறிவிட்டு செல்கிறார் ஆனால் அதிகாரிக்கு ராதிகா மேல் சின்னதாக டவுட் வந்துவிட்டது. இது ஒரு புறம் இருக்க கோபி தன்னுடைய நண்பரை வரவழைத்து லன்ச் கொடுக்கிறார்.
தன்னுடைய நண்பனிடம் அனைத்தையும் புலம்பி தள்ளுகிறார் நிறைய சம்பாதித்தாலும் வீட்டு மளிகை சாமான் வாங்குவது என அனைத்திற்கும் செலவு ஆகிறது அதனால் எனக்கு ஒரு லட்சம் கடன் வேண்டும் என கேட்கிறார். அதுமட்டுமில்லாமல் ராதிகா ரொம்ப நல்லா பொண்ணு அவளோட இருக்கும்போது சந்தோசமா இருக்கேன். எங்களுக்குள்ள ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு என கோபி கூறிக்கொண்டே செல்கிறார்.
ஆனால் வீட்டு செலவிற்காக ஒரு லட்சம் கடன் கேட்டது தான் கோபி நண்பருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது இதை கோபி இடம் சுட்டிக்காட்டுகிறார். இது ஒரு ஒரு புறம் இருக்க அமிர்தா ஜெனி பாக்யா செல்வி என அனைவரும் வரவு கணக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அனைத்தையும் முடித்துவிட்டு மீதம் எவ்வளவு இருக்கிறது என பாக்கியா ஜெனி இடம் கேட்கிறார் அதற்கு ஜெனி மீதம் எவ்வளவு இருக்கிறது என கூற உடனே பாக்கியாவின் முகம் மாறுகிறது.
ஏனென்றால் எட்டு நாள் கல்யாணத்தில் சமைத்த பணத்தின் மிச்சத்தை பார்த்ததும் பாக்கியாவின் முகம் மாறுகிறது உடனே ஜெனியிடம் இனியாவின் அப்பாவை வர சொல்லு என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் பாக்கியலட்சுமி என்னுடைய செக் புக் இருக்கிறதா என கேட்க ஜெனி இருக்கு ஆன்ட்டி எனக்கு கூறுகிறார் அதில் செக் லீப் இருக்கிறதா என கேட்கிறார் அதுவும் இருக்கு எனக் கூற செல்வி உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்ச அக்கா எதற்காக அவரை வர சொல்றீங்க என கேட்கிறார்.
வந்த பிறகு பாரு என பாக்கியா ஒரே போடாக போடுகிறார் அந்த பக்கம் கோபி தன்னுடைய நண்பரிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜெனி கோபிக்கு போன் செய்கிறார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி ஃபோனை அட்டென்ட் செய்து என்ன ஜெனி ஏதாவது பிரச்சனையா அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார். அதற்கு ஜெனி அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா நீங்க இந்த பக்கம் வந்துட்டு போங்க என கூறிவிட்டு போனை கட் செய்கிறார்.
கோபி வந்ததும் ஜெக்கில் கையெழுத்து போட்டு கோபியின் முகத்தில் அனைவரும் முன்பும் வீசுவார் பாக்யா என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய எபிசோட்டில் கோபியின் முகத்தில் பாக்கியா பணத்தை விட்டு எறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட முழு நீலாம்பிரியாக பாக்யா மாறி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..