விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என ஏழில் அவரிடம் கூறி ஒருவழியாக முடிவு எடுக்கிறார் பின்பு ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக அடுத்த நாள் காலையில் செல்வதற்கு கிளம்பி விடுகிறார்.
அப்பொழுது அனைவரும் ஷோபாவில் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஜெனி சாப்பிட்டியா அமிர்தா சாப்பிட்டியா என கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு நீங்கள் ஏன் சாப்பிட வரவில்லை என கேட்கிறார்கள் அதற்கு பாக்யா நான் வந்து சாப்பிட்டுக் கொள்கிறேன் நான் ஒரு வேலையா வெளியே போகிறேன் என கூற உடனே செல்வி அதிர்ச்சி அடைகிறார். எங்க போனாலும் என்னை கூட்டிக் கொண்டுதான் போவீர்கள் என்ன இது புது விஷயமா இருக்கு என செல்வி கேட்க எல்லா இடத்துக்கும் உன்னை கூட்டிக் கொண்டு போக முடியுமா என கூறி விடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் போயிட்டு வந்த பிறகு என்னன்னு சொல்லுகிறேன் என கூறி விடுகிறார். ஆனால் செல்விக்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கிறது. உடனே பாக்யா கிளம்பி விடுகிறார் மற்றொரு பக்கம் கோபி சைக்கிள் வாங்குவதற்காக மயூ இனியா ராதிகாவும் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சைக்கிள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். முதலில் இனியா டாடி இங்க வாங்கல இது நல்லா இருக்கா என்று பாருங்கள் என கூற உடனே மையூவும் டாடி இங்கே வா என கூறுகிறார்.
இருவரும் ஒரே நேரத்தில் கூப்பிடுவதால் கோபிக்கு எங்கு செல்வது என ஒரே கன்பியூஸ் ஆக இருக்கிறது ஆனாலும் சமாளித்துவிட்டு செல்கிறார் அங்கு இனியவிடம் இந்த சைக்கிளை பார்த்துக் கொண்டிரு நல்லாத்தான் இருக்கு என கூறிவிட்டு மயூவிடம் சென்று அவர் பார்த்துள்ள சைக்கிளையும் நன்றாக இருக்கிறது என கூறி விடுகிறார் பின்பு இனியாவிடம் வந்து இதைவிட நல்லா சைக்கிளா பாரு பிரைஸ் கொஞ்சம் அதிகமா இருந்தாலும் பரவால்ல லைஃப் லாங் இருக்கணும் எனக் கூறுகிறான்.
இதை காதில் வாங்கிக் கொண்டிருந்த ராதிகா மயூவை இந்த சைக்கிள் சரியில்லை நல்ல சைக்கிளாக பார்க்கலாம் என 20 ஆயிரத்துக்கு மேல் ஒரு சைக்கிளை பார்க்கிறார்கள் அதை பார்த்துவிட்டு கோபியை அழைத்து இந்த சைக்கிள் நல்லா இருக்கா என கேட்கிறார்கள் நல்ல சைக்கிள் நல்ல பிராண்ட் என கூற உடனே கோபி எவ்வளவு விலை என பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 20 ஆயிரத்துக்கு மேலயா என அதிர்ச்சி அடைய உடனே ராதிகா எதற்காக இப்ப விலையை பாக்குறீங்க மயூக்கு பிடித்திருந்தால் வாங்கட்டும் என கூறி விடுகிறார்.
மற்றொரு பக்கம் இனியா ஏழாயிரத்திற்கு சைக்கிளை வாங்குகிறார் இரண்டு பேரும் சைக்கிளை தேர்வு செய்து விட்டு கோபி பணத்தை கட்டி விட்டு அழைத்து வருகிறார். மற்றொரு பக்கம் பாக்கியா ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போகிறார் அங்கு ரிசப்ஷன் லிஸ்டில் இருக்கும் பெண்ணிடம் பேசிவிட்டு பணத்தையும் கட்டி விட்டு வெளியே வருகிறார் பின்பு போனை எடுத்து எழிலுக்கு போன் செய்கிறார்.
வண்டி ஓட்டிக்கொண்டே ஃபோன் பேசிக் கொண்டு வரும் பொழுது இந்த சீரியலுக்கு புதிதாக புல்லட்டில் ஒருவர் வருகிறார். அவர் மேல் இடித்து பாக்கிய கீழே விழுகிறார் அவர் ஸ்கூட்டியை தூக்கி விட்டு பாக்கியாவையும் எழுந்திருக்க வைத்து பின்பு கிளம்புகிறார் இவரின் புதுவரவு பாக்யாவிற்கு இவர் தான் ஜோடியாக போகிறாரா அல்லது ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் வாத்தியாராக இருப்பாரா என அடுத்த எபிசோடில் தெரியவரும்…
ஆனால் அதற்குள் ரசிகர்கள் இவர்தான் பாக்யாவிற்கு புது ஜோடி என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்..