பாக்கியாவை புகழோ புகழ்ன்னு புகழ்ந்து ராதிகாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட கோபி.! ரெண்டு பக்கமும் மோத்தோ மொத்துனு மொத்துறாங்களே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள் இந்த சீரியலில் கோபி முதலில் பாக்கியவை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி பல பொருளாதார சிக்கலை  சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும்  மிகவும் பரபரப்பாக எபிசோட் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட் ரசிகர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருக்கும் வகையில் இன்றைய எபிசோடில்  பாக்கியா எழிலிடம் காபியை கொடுத்துவிட்டு நான் உன்னிடம் பேச வேண்டும் அதனால் தான் இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூற எழில் என்ன என கேட்க அதற்கு பாக்யா நான் இங்கிலீஷ் கிளாஸ் போகட்டுமா என கேட்கிறார்.

அதனால் என்ன அம்மா நானே சொல்லிக் கொடுக்கிறேன் காலையில் அரை மணி நேரம் மதிய அரை மணி நேரம் எனக் கூற அதெல்லாம் வேண்டாம் நான் கிளாஸ் போகிறேன் எனக் கூறுகிறார் பாக்யா சரி ஓகே அம்மா நீ கிளாஸ் போ என எழில் கூறுகிறார். அடுத்த காட்சியில் சரண் இனியாவிடம் பேசிக்கொண்டே நடந்து வருகிறார் அப்பொழுது சரண் இலை மறை காயாக இனியாவிடம் ப்ரபோஸ் செய்கிறார் அதில் இனியா தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.

மற்றொரு காட்சியில் செழியன் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது தாத்தா ஈஸ்வரி ரூமுக்கு நிலா பாப்பாவை தூக்கி செல்கிறார் அங்கு ஈஸ்வரி இவள இங்க தூக்கி கொண்டு ஏன் வந்தீங்க என தாத்தாவை ஈஸ்வரி திட்டுகிறார் அதற்கு தாத்தா அவ சின்ன பொண்ணு அவளிடம் ஏன் உன் கோபத்தை காட்டுற என தாத்தா கூறுகிறார் அதனால் நிலா பாப்பா கோவப்பட்டு வெளியே வருகிறார்.

அங்கு வந்த நிலா செழியனிடம்  நாம விளையாடுமா என கேட்க செழியனும் நிலா பாப்பாவுடன் விளையாடிக்கொண்டு கொண்டிருக்கிறார் அப்பொழுது எழில் அங்கு வருகிறார், உடனே செழியன் நிலா பாப்பாவுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போனை எடுத்துக் கொண்டு செல்கிறார். அதன் பிறகு செழியன் எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது. தண்ணீர் தீர்ந்து விடுகிறது அதனால் ஜெனியை தண்ணீர் எடுத்துக் கொண்டு வா என செழியன் கூறுகிறார் உடனே தண்ணீரை எடுத்துக் கொண்டு அமிர்தா செல்கிறார்.

தண்ணீரை வாங்கி வைத்துக் கொண்டு செழியன் தேங்க்ஸ் என கூறுகிறார். மற்றொரு பக்கம் கோபி இனியா மற்றும் மயூவை ஸ்கூலில் டிராப் செய்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் அங்கு ராதிகா அப்செட் ஆக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது ஆபீஸில் நடந்ததை ராதிகா சொல்ல முற்படுகிறார் உடனே கோபி டெண்டர் யாருக்கு கிடைத்தது என கேட்க ராதிகாவும் பாக்கியாவிற்கு கிடைத்துவிட்டது என கூறுகிறார்.

உடனே கோபி அதிர்ச்சியாகிறார் எப்படி அந்த மண்ணு முட்டுக்கு டெண்டர் கிடைத்தது. காபி வேணுமா தோசை வேணுமா? இது தான் அவளுக்கு கேட்க தெரியும் அவளுக்கு எப்படி இவ்ளோ பெரிய டண்டர் கிடைத்தது. அவளுக்குள் இவ்வளவு திறமை இருக்கிறதா. 20 லட்சம் கொடுக்கிறேன் என்று சவால் விடுகிறார் உடனே ஒரே வாரத்தில் இரண்டு லட்சம் செக்கை எடுத்து நீட்டுகிறார் என கோபி பாக்யாவை புகழ்ந்து கொண்டே இருக்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ராதிகா சட்டென எழுந்து நீங்க என்ன பாக்கியவை இப்படி புகழ்கிறீர்கள் உங்களுக்கு காபியும் கிடையாது ஒன்னும் கிடையாது நீங்களே காபி போட்டு எடுத்துக்கிட்டு வாங்க என கூறிவிட்டு உள்ளே செல்கிறார் ராதிகா. கோபிக்கு பாக்கியா படிப்படியாக முன்னேறுவதால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் ராதிகாவின் சில ஆக்டிவிட்டிகள் கோபியை சங்கடப்படுத்தி வருகிறது.

இப்படியே போனால் கோபி பாக்கியாவிடம் சென்றடைவார் என பலரும் கருத்து தெரிவித்து. வருகிறார்கள்