நடுராத்திரியில் எலிமினேட்டாகும் பிக்பாஸ் பிரபலம்.! ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ்..

simbu biggboss ultimate
simbu biggboss ultimate

கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் ஒளி பரப்பும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.  தற்பொழுது இந்நிகழ்ச்சி இறுதி வாதத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து போட்டியாளரும் போட்டி போட்டுக்கொண்டு மிகவும் சுவாரசியமாக விளையாட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது எரிக்சன் பிராசஸ் நடைபெற உள்ளது.  அந்த வகையில் தற்பொழுது பாலாஜி முருகதாஸ்,தாமரை, ரம்யா பாண்டியன், அபிராமி, ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டியாளர்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று முதலிடத்தில் பாலாஜி இருந்து வருகிறார். அதனைத்தொடர்ந்து தாமரை, நிரூப் மற்றும் ஜூலி உள்ளிட்டவர்கள் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன் அல்லது அபிராமி இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் முக்கியமாக ரசிகர்கள் செய்த கமெண்டில் அதிகபடியாக அபிராமி தான் செல்ல வேண்டும் என்று கூறி வருகிறார்கள் இவரின் நடவடிக்கை சரியில்லை யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே அபிராமி கொஞ்சம் ஓவராக சீன் தான் போட்டு வருகிறார் எனவே ரசிகர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வாரமே இவர்தான் எவிக்ஷன் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் எப்படியோ தப்பித்து விட்டார் ஆனால் கண்டிப்பாக இந்த முறை அபிராமி தான் வெளியே செல்ல வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இதைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியனும் பாலாவை டார்கெட் செய்து ஏதாவது பாலாவிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால் இவர் மீதும் ரசிகர்கள் எரிச்சலில் இருந்து வருகிறார்கள்.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது பாலா தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடுராத்திரியில்  எவிக்ஷன் ப்ராசஸ் நடக்க இருக்கிறது.