மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ராதிகாவையே யார் என கேட்ட கோபி.! வெடித்தது புதிய பிரச்சனை.! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி எபிசோட்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல பிரபலமடைந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் வகையில் பாக்கியலட்சுமி கேட்டரிங் ஆர்டரை எடுத்துவிட்டால்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போய்க் கொண்டிருக்கிறார். அங்கு புதிதாக ஒருவரை சந்திக்கிறார் அவர் பாக்கியவருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதன் நிலையில் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போவதை அனைவரிடமும் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் கேட்டரிங் ஆர்டர் கிடைத்ததும் அதற்கு தேவையான  பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பதற்காக வண்டியை வரச் சொல்கிறார் அப்பொழுது கார் குறுக்கே நிற்பதால் காரை எடுத்து ஓரமாக விட சொல்கிறார்கள்.

உடனே எழில் சாவியை எடுத்துக் கொண்டு வருகிறார் பாக்யா நான் காரை ஓரமாக நிப்பாட்டட்டுமா என பாக்கியா கேட்க எழில் ஓகே என கூறுகிறார்கள் உடனே பாக்யா ஸ்டைலாக காரை எடுக்கிறார் அதை பார்த்த கோபி வாயை பிளக்கிறார். அதுமட்டுமில்லாமல் கோபி பின்னால் இடிப்பது போல் பாக்யா மிகவும் வேகமாக வண்டியை திருப்புகிறார் இதை பார்த்த கோபி பாக்யாவா கார் ஓட்டுவது என அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் பாக்கியா தன்னுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நோட்க்கு பள்ளியில் படிப்பது போல் அட்டை எல்லாம் போட்டு அழகாக வைத்துக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு பார்க்கு சென்றுள்ளார் அங்கு மூக்கு முட்ட குடித்துக் கொண்டிருக்கிறார். கோபி நண்பர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக குடித்துக் கொண்டிருக்கிறார்.

கோபி நண்பர் நான் அப்பவே சொன்னேன் பாக்கியா இருந்திருந்தால் செலவு எல்லாம் கரெக்டாக பார்த்திருப்பாள். எனக் கூற கோபி டென்ஷன் ஆகி அந்த இடியட் பத்தி பேசாத எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் பாக்யா கார் ஓட்டுவதையும் தன்னுடைய நண்பரிடம் கூற அவரும் அதிர்ச்சி அடைகிறார்.

மூக்கு முட்ட குடித்துவிட்டு கோபி ராதிகா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது மயூ கதவை திறந்தவுடன் மயூவை கோபி கொஞ்சுகிறார் அதுமட்டுமில்லாமல் சோபாவில்  கோபி அமர்ந்த பிறகு இனியாவையும் நீதான் என் உலகம் நீ மட்டும் தான் வேண்டும் என கொஞ்சுகிறார் இதைப் பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் இனிய அப்பா மேல் பேட் ஸ்மல் வருகிறது எனக் கூற தாத்தா ராமமூர்த்தி என்ன குடிச்சிட்டு வந்தியா என கேட்கிறார்.

அதற்கு கோபி நான் குடித்தாலும் ஸ்டடியாக இருக்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார் பின்பு எழுந்து ரூமுக்கு செல்வதற்காக கதவைத் திறந்து வெளியே செல்ல போகிறார் அதற்கு அந்த பக்கம் ரூம் இல்ல இந்த பக்கம் என கூறுகிறார்கள். உடனே ராதிகா கோபியை அழைத்துக் கொண்டு போக வரும்பொழுது கைய வைக்காத நீ யார் என கேள்வி கேட்கிறார் இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

ஒரு வழியாக கோபியை ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறார்கள் பின்பு வெளியே வந்த ராதிகாவிடம் இனியா உன்னால் தான் எங்க அப்பா இப்படி எல்லாம் செய்கிறார் அங்கு இருக்கும் பொழுது இப்படி எல்லாம் நடந்து கொள்ளவே மாட்டார் என இனியாராதிகாவிடம் சண்டை போடுகிறார் அதற்கு ராதிகாவும் எனக்கே ஷாக்கா இருக்கு என்னால தான்னு எப்படி நீ சொல்லுற என இனியாவிடம் ராதிகா சண்டையிடுகிறார்.

தாத்தா வாய மூடிட்டு சும்மா இரு இனியா என இனிய விடம் கத்துகிறார் தாத்தாவும் அங்கு இருந்த கோபி இதுபோல் நடந்துகிட்டது கிடையாது ஆனால் இங்கு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் எனக் கூறுகிறார் அதற்கு ராதிகா என்னால தான் இது மாதிரி நடந்து கொள்கிறார் என்று கூறுகிறீர்களா நீங்களும் என கேள்வி எழுப்புகிறார்.

பின்பு தாத்தா இனியாவை அழைத்துக் கொண்டு வெளியே போகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது நாளை கோபி குடி போதையில் இருந்து தெளிந்ததும்  பழையபடி ராதிகா கோபியிடம் சண்டை போடப் போகிறாரா இல்லை என்ன நடக்கும் என்பது நாளைய எபிசோட்டில் தெரியவரும்.