விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி முதலில் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை என பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு தான் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் எபிசோடு ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்றைய எபிசோடு ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவின் மகள் மயூவுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்கிறார் அப்பொழுது அங்கு வந்த இனியா அப்பா எனக்கு சைக்கிள் வேணும் நான் டியூஷன் போவதற்கு சைக்கிள் வேண்டும் என கேட்கிறார்.
அதற்கு ராதிகா இப்ப எதுக்கு சைக்கில் இன்னும் ஒரு வருடம் தானே அப்புறம் டூ வீலரை வாங்கிக் கொள்ளலாமே என கூறுகிறார் நான் இப்பதான் டியூஷன் போறேன் இப்பதான் எனக்கு சைக்கிள் வேணும் என இனிய அடம் பிடிக்கிறார் உடனே அதற்கு தாத்தாவும் இப்ப எதுக்கு உனக்கு சைக்கிள் அதை நான் வரன்ல என கூற உங்களுக்கு ஏன் தாத்தா கஷ்டம் நானே போயிட்டு வந்துருவேன் பக்கத்துல தான் இருக்கு அதனால சைக்கிள் இருந்தா போதும் என கேட்கிறார்.
ராதிகா இப்ப எதுக்கு சைக்கிள் என கேட்கும் பொழுது கோபி நீ சும்மா இரு அவ சைக்கிள் தான கேக்குற ஏன் இப்படி பேசுற என கூறிக் கொண்டிருக்கிறார் உடனே பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் மயூவும் எனக்கும் சைக்கிள் வேண்டும் என கேட்கிறார் நீ எங்க போக போற டியூஷன் போற அதனால சைக்கிள் கேக்கற நீ எதற்கு சைக்கிள் கேட்கிறார் என கேட்க நான் இந்த இந்த ஸ்ட்ரீட் குள்ளேயே ஓட்டிக்கொண்டு இருப்பேன் என கேட்கிறார்.
உடனே கோபி சரி விடுங்க ரெண்டு சைக்கிள் வாங்கிவிட்டால் போச்சு என கூறுகிறார் ஆனால் தன்னுடைய பொருளாதார நெருக்கடியை கோபியால் சமாளிக்க மிகவும் கஷ்டமாக இருப்பதை அவர் முகத்திலேயே தெரிகிறது ஏனென்றால் வீட்டு செலவிற்காகவே தன்னுடைய நண்பரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி இருந்தார் ஆனால் தற்பொழுது இப்படி செலவு அதிகமாகிக் கொண்டே போவதால் கோபி கொஞ்சம் அப்செட் ஆக இருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ராதிகா அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது கோபி என்னாச்சு என கேட்க ராதிகாவும் தன்னுடைய ஆபீஸில் நடந்ததை கூறுகிறார். உடனே கோபி அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் என கூற ராதிகாவும் கோபியும் கிளம்புகிறார்கள். ராதிகா ஆபீஸில் டெண்டர் காக அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் வீட்டில் ஜெனி, அமிர்தா, எழில் அனைவரும் உட்கார்ந்திருக்க பாக்கியா ராதிகா ஆபீஸிற்காக டென்ட்ருக்காக கிளம்பி கொண்டிருக்கிறார்.
செல்வியும் பாக்யாவும் ராதிகா ஆபீஸ்க்கு செல்கிறார்கள் அப்பொழுது ராதிகா வழி மறைத்து பாக்யாவை கிண்டல் செய்கிறார் அதற்கு பதிலடி கொடுக்கவும் விதமாக நான் எல்லாத்தையும் அப்ளை பண்ணிட்டு தான் வந்திருக்கேன் என கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பின்பு டெண்டர் சீட்டில் பாக்கியா உட்காருகிறார் உடனே ராதிகாவின் ஹெட் அனைவரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார். அனைவரும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாக்கியாவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
ஆனால் உடனே ராதிகா நிறுத்து உன்னுடைய ஃப்ளாஷ் பாக் கேட்கவில்லை எப்படி சமைக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம் என பாக்யாவை அவமானப்படுத்துகிறார். பின்பு ராதிகாவின் உயர் அதிகாரி அனைவரும் கொஞ்சம் வெளியே இருங்கள் என கூறிவிடுகிறார் பின்பு டெண்டரை பார்த்த உயரதிகாரி அனைவரையும் அழைத்து உள்ளே உட்கார சொல்லி இந்த டெண்டர் பெண்களுக்கான முன்னுரிமை அதனால் பாக்யாவிற்கு கொடுக்கிறோம் என கூறுகிறார்.
இதை பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைகிறார் இனி ராதிகாவின் ஆபீஸில் பாக்யாவிற்கு டெண்டர் கிடைத்து விட்டதால் ஒவ்வொரு நாளும் ராதிகா பாக்கியாவை டார்ச்சர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.