இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் ராதிகா கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார் கெஞ்சோ கெஞ்சுன கெஞ்சி காலில் விழுந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் கோபி ராதிகா காலில் விழுந்து கெஞ்சிவதை பார்த்த ஈஸ்வரி ராமமூர்த்தி தாத்தா, செழியன், எழில், இனியா அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.
பின்பு காலில் விழுந்து கெஞ்சி எப்படியோ ராதிகாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார் கோபி இதை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி குமரி குமரி அழுகிறார் அது மட்டும் இல்லாமல் என் மகன் எப்படி இருந்தான் அவன் வீதியில் வந்தால் அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள் ஆனால் இன்று தெருவிலேயே சண்டை போடுகிறானே அவனுக்கு இந்த நிலைமை வேணுமா அவனே தேடிக் கொண்ட வாழ்க்கை என புலம்பி தள்ளுகிறார்.
அதுமட்டுமில்லாமல் நான் எவ்வளவு சொல்லியும் என் பேச்சைக் கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்தான் அவகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட வா இப்படி ஒரு முடிவை எடுத்தான் என ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார் அவனே ஒரு முடிவை எடுத்து மொத்த குடும்பத்தையும் அழ வைத்தான் கடைசியில அவனாவது நிம்மதியா சந்தோஷமா இருப்பானு பார்த்தா அவனும் இப்ப இப்படி இருக்கான். ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தான் என அழுது கொண்டு இருக்கிறார் ஈஸ்வரி.
அப்பொழுது எழில் அனைத்து உண்மைகளையும் ஈஸ்வரியிடம் கூறுகிறார் அவர் குடித்து விட்டு காரில் விழுந்தது அவரைக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்தது என அனைத்தையும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைகிறார்கள் பாக்கியா குடும்பம் உடனே ஈஸ்வரி அவளால் தானே குடிக்கிறான் எனக் கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
காலில் விழுந்து ராதிகா மற்றும் மயூவை வீட்டிற்கு அழைத்து வந்தார் கோபி உடனே ராதிகா எல்லாமே என்னோட தப்பு தான் நான் தான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் இவரை கல்யாணம் பண்ணிட்டா உனக்கு நல்ல அப்பா கிடைப்பார்னு நினைச்சேன் ஆனா அதுவே பெரிய சோதனையா ஆயிடுச்சு என புலம்பி தள்ளுகிறார் ராதிகா அது மட்டுமில்லாமல் கோபி அப்பொழுது கூட காலில் விழுந்து என்ன மன்னிச்சிடுங்க இனிமே இந்த தப்பா செய்யவே மாட்டேன் இனியா போனதால தான் குடிச்சிட்டேன் இனிமே இத செய்யவே மாட்டேன் என கூறுகிறார்.
உடனே ராதிகா அப்போ எங்க மேல உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறையே கிடையாது நாங்க எப்படி போனால் உங்களுக்கு என்ன என வார்த்தையால் குத்தி கிழிக்கிறார் ராதிகா. அதுமட்டுமில்லாமல் கோபி சத்தியம் செய்தும் உங்களை நம்ப முடியாது எனக் கூற உடனே ஒரு நிமிடம் இரு எனக் கூறிவிட்டு பூஜை ரூம் க்கு செல்கிறார். அங்கு போய் எல்லாத்துக்கும் நீ தான் துணை உன்ன நம்பி தான் என் வாழ்க்கையே இருக்கு காப்பாற்ற என விளக்கை ஏற்றுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ராதிகாவையும் நான் குளிச்சிட்டு சாமி கும்பிட ரெடியாகிவிட்டேன் சாமி முன்னாடியே சத்தியம் செய்கிறேன் வா என கூப்பிட மயூம் எழுந்திருக்கிறார் ஆனால் ராதிகா அவரை பிடித்து ராதிகா இழுத்து உட்கார வைக்கிறார். பின்பு சூடத்தை ஏற்றுக் கொண்டு ராதிகா முன்பு என்னை பார் ராதிகா லாஸ்ட் ஒரு சான்ஸ் கொடு என கெஞ்சுகிறார். சாமிக்கு விளக்கு ஏத்திருக்கான் சாமி மேல சத்தியமா இனி குடிக்க மாட்டேன் என சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணுகிறார்.
என்ன மன்னிச்சிடு ராதிகா என் மேல கோபப்படாத என்ன கதறுகிறார். யாரோ போன் பண்ணதுக்கு என் மேல என் கோபப்படுற அந்த இடியட் பண்ண தப்புக்கும் அந்த மனுஷன் பண்ண தப்புக்கும் நான் என்ன பண்ணுவேன் என கூறுகிறார் கோபி. நம்ப ரெண்டு பேருக்கும் சண்டை வரணும் என்பதற்காகத்தான் பாக்கி இங்க வந்து விட்டுட்டு போயிருக்கா என ஏதேதோ சொல்லி ராதிகாவின் மண்டையை கழுவுகிறார்.
மற்றொரு பக்கம் ஈஸ்வரி கோபியை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தி இடம் கோபியை நினைத்து வருத்தப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் செழியன் ரூமுக்கு வருகிறார் அவரிடம் ஈஸ்வரி நீ கோபிக்கு ஏதாவது ஒரு இடத்திற்கு வர சொல்லி போன் செய் அவனிடம் பேச வேண்டும் என கூறுகிறார் ஈஸ்வரி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
ஈஸ்வரி கோபியிடம் பேசி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இது ராதிகாவிற்கு பெருத்த அடியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.