விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் நீண்டகாலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் கோபி பாக்கியாவை திருமணம் செய்துகொள்வார் ஆனால் பாக்கி அவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள கோபி ஆசைப்படுகிறார்.
இன்றைய எப்பிசோட்டில் கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது ராதிகாவிடம் என்னை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய் நான் பொய் சொன்னது உங்களுக்காக நம்முடைய நல்லதுக்காகத்தான் நாம் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு கூறினேன் என தனது பக்கமுள்ள நியாயங்களை எடுத்துக் கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் எதற்காக மும்பை போகிறாய் எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசி முடிவு செய்து கொள்ளலாம்.
என்னிடம் மும்பை செல்வதை ஏன் கூறவில்லை என கோபி கேட்கிறார் அதற்கு ராதிகா நான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது அப்படி உங்களிடம் சொல்லும் அளவிற்கு உங்களுக்கும் எனக்கும் உறவு பெரிதாக எதுவும் கிடையாது. என மூஞ்சில அடித்தது போல் கூறி விடுகிறார். அதனால் கோபி மனம் உடைந்து நிற்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ராதிகா முதலில் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என அவரைப் பிடித்துத் தள்ள முற்படுகிறார் ஆனால் கோபி விடு நானே போய் விடுகிறேன் என வெளியே செல்கிறார்.. ஆனால் கோபியின் வீட்டில் கோபியின் வண்டவாளம் அனைவருக்கும் தெரிந்து விட்டது ஆனால் ஈஸ்வரி மற்றும் கோபியின் மகளுக்கு மட்டும் தெரியவில்லை ஈஸ்வரி தாத்தா மற்றும் எழிலிடம் துருவித்துருவி கேள்வி கேட்கிறார் அப்படி என்றால் என் மகன் கோபி தவறு செய்துவிட்டானா என அழுகிறார்.
ஈஸ்வரி தாத்தாவிடம் துருவி துருவி கேள்வி கேட்க முற்படுகிறார் ஆனால் எழில் தாதாவை விட்டுவிடுங்கள் என நாசுக்காக பேசி ரூமிற்கு அழைத்து சென்று விடுகிறார். தாத்தாவிடம் எழில் நடந்த அனைத்தையும் ராதிகாவின் கணவர் என்னிடம் கூறிவிட்டார் அப்பா இன்னும் திருந்தவில்லை அவர் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுள்ளார் என எழில் தாத்தாவிடம் கூறுகிறார்.
இது பாக்யாவிற்கு தெரிந்தால் என்ன நடக்கும் அவள் தாங்குவாளா என தாத்தா கூறுகிறார் அதற்கு எழில் அம்மாவிற்கு ஏற்கனவே டவுட் வந்துவிட்டது. ஆனால் எதையும் காட்டிக்கொள்ளவில்லை என எழில் கூறுகிறார் உடனே தாத்தா மற்றும் எழிலும் கண்ணீரில் மிதக்கிறார்கள். இந்த விஷயம் பாக்கியாவிற்க்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதுதான் நாளை எபிசோடில் தெரியவரும்.