கோபி மண்டையை கழுவும் ஈஸ்வரி.! பதறி அடித்துக் கொண்டு ஓடி போய் பாக்கியாவிடம் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்ட ராதிகா.!

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி பாக்யாவை முதலில் திருமணம் செய்து கொள்வார் பின்னர் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விடுகிறார்.

ஒரு காலகட்டத்தில் ராதிகாவையே கோபி இழக்கிறார். அதாவது இனியா சென்ற பின் அந்த வலியை தாங்க முடியாமல் கோபி மூக்கு முட்ட குடித்து விடுகிறார். பின்பு தள்ளாடிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டு வரும் வழியில் இப்பொழுது ஆக்சிடென்ட் ஆகிறது பின்பு கோபி கார் பக்கத்திலேயே படுத்து கொள்கிறார் அவரை அழைத்துக் கொண்டு ராதிகா வீட்டில் விடுகிறார் பாக்கியா. ஃபுல் மப்பில் இருக்கும் கோபி ராதிகாவை திட்டி தீர்த்தும் பாகியாவை புகழ்ந்தும் பேசுகிறார்.

இதனால் அடுத்த நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேற ராதிகா முடிவு செய்து பையில் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார். ராதிகா வெளியே செல்வதற்கு கேப் ஒன்றை புக் செய்கிறார்  கேப் வருவதற்கு தாமதமாகிறது ஆனால் அந்த நேரத்தில் கோபி ராதிகாவிடம் கெஞ்சுகிறார் நடுத்தெருவிற்கு வந்து காலில் விழுந்தும் கெஞ்சுகிறார். கொஞ்சம் கூட மனம் இறங்காமல் ராதிகா இங்கிருந்து கிளம்ப போகிறேன் என்னை விட்டு விடு என கூறுகிறார்.

அப்படி இருக்கும் நிலையில் வருகின்ற வாரம் என்ன நடக்கப் போகிறது என்பதை ப்ரோமோ வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில்  ஈஸ்வரி கோபியிடம் உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி செய்ற பேசாம ராதிகாவை விட்டு விட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு என கேட்கிறார் இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார் இதை ஓரமாக நின்று கொண்டு ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஈஸ்வரி கூறியதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார் பின்பு ராதிகா பாக்கியாவை சந்திக்கும் பொழுது மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழ இருந்தது ஆசைப்படுகிறீர்களா. கோபி இல்லாமல் வாழ முடியவில்லையா என பயங்கர கோவமாக கேட்கிறார் அதற்கு பாக்கியா நான் தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என கூறினார். அதாவது பாக்கியாவை தி ட்ட வந்த ராதிகா வாங்கி கட்டிக்கொண்டு கோபத்தின் உச்சிக்கே செல்கிறார்.

அப்படி இருக்கும் வகையில் இந்த வாரம் எபிசோட் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.