ஆடுனது ஐட்டம் சாங், இதுல பெருமை வேற.. அநியாயம் பண்ணும் கோபி, கடுப்பில் பாக்கியா

விஜய் டிவியில் பல வருடமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் முடிய இருக்கிறது. ஆனால் அது எப்போது என்று தான் ரசிகர்களுக்கு தெரியவில்லை. அதுவரை ஏதாவது உருட்டுவோம் என இயக்குனரும் முடிவு செய்துவிட்டார்.

அதன்படி தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இனியா நடன போட்டியில் கலந்து கொள்கிறார். அதற்காக பாக்யா எழில் என அனைவரும் வந்திருக்கின்றனர். அதேபோல் கோபியும் மகளின் நடனத்தை காண வந்திருக்கிறார்.

ஒவ்வொருவராக ஆடும் நிலையில் இனியா அரண்மனை 4 படத்தில் வரும் அச்சோ அச்சோ பாடலுக்கு நடனம் ஆடுகிறார். மகளின் ஆட்டத்தை பார்த்து பூரித்துப் போன கோபி எழுந்து விசில் அடித்து அலப்பறை செய்கிறார்.

இதை சைலண்டாக கவனிக்கும் பாக்யாவுக்கு அவ்வளவு கோபம் வருகிறது. ஆனாலும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் யார் வின்னர் என அறிவிக்கப்படுகிறது. எதிர்பார்த்தது போலவே இனியாவுக்கு பரிசு கிடைக்கிறது.

உடனே கோபி என்னோட பொண்ணு என அவன் இருப்பவர்களிடம் சொல்லி பெருமைப்படுகிறார். இனியாவும் தன் அப்பாவை கட்டிப்பிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். இப்படியாக ஒரு ப்ரோமோ வெளிவந்துள்ளது.

ஆனால் இதில் என்ன லாஜிக் என்று தெரியவில்லை. பொண்ணு ஆடினது ஐட்டம் பாடலுக்கு ஆனால் அப்பாவுக்கு பெருமை பிடிப்படவில்லை. இதைத்தான் ரசிகர்களும் கழுவி ஊற்றி வருகின்றனர். எப்படியாவது சீரியலுக்கு சுபம் போடுங்க எனவும் திட்டி தீர்த்து வருகின்றனர்.