ராதிகாவிடம் மொத்து மொத்துன்னு அடி வாங்கும் கோபி.! பாக்கியா பாய் பிரண்டால் உச்சகட்ட கோவத்தில் ஈஸ்வரி… பரபரப்பாகும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்…

baakiyalakshmi
baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா புதிதாக திறக்கும் கேண்டின் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கேண்டின் விழாவிற்கு வரவே மாட்டேன் என சூடை ஏற்றி சத்தியம் பண்ணி வரமாட்டேன் என கூறிய ஈஸ்வரி கூட கேண்டின் விழாவிற்கு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதுமட்டுமில்லாமல் இனியாவை கேண்டின் பங்க்ஷன்க்கு போகக்கூடாது என கோபி கிடுக்கு பிடி போட்டும் அதனையும் தகர்த்து இனியாவும் கேண்டின் பங்க்ஷன்க்கு வந்தது பாக்கியாவிற்கு இரண்டு மடங்கு சந்தோசம் தான்.

கோடீஸ்வரன் சார் ராஜசேகர் சார் என அனைவரும் பாக்யாவின் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அற்புதம் செம சூப்பராக இருக்கிறது என புகழ்ந்து தள்ளுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ராதிகாவை அழைத்து இவங்களுக்கு அப்பவே கேண்டீன் ஆர்டர் கொடுக்கலாம் என கூறினேன் கொடுத்திருந்தால் நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்கலாம். எனக் கூறுகிறார் எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மேனேஜர் இவ்வாறு கூறியதும் ராதிகா செம கடுப்பில் இருக்கிறார்.

அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியாவுடன் கோச்சிங் கிளாசில் கத்துக் கொண்டு வரும் அனைவரும் திறப்பு விழாவிற்கு வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இதனை ஈஸ்வரி பார்த்து யார் என கேட்க பாக்யா ஜெனியிடம் கூற ஜெனி எப்படியாவது பாட்டியை அப்புறப்படுத்தி விடலாம் என அழைத்துக் கொண்டு போக இருக்கிறார். ஆனால் தாத்தா அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதால் ஈஸ்வரி உடனே நான் அங்கு இல்லை என்றால் நல்லா இருக்காது என கிளம்பி  பாக்கியா கிட்ட வருகிறார்.

உடனே இனியா இவர்களெல்லாம் அம்மாவுடன் இங்கிலீஷ் கிளாஸ் படிக்கிறவர்கள் என கூறி ஈஸ்வரியை அதிர்ச்சி குள்ளாக்குகிறார். மேலும் பழனிச்சாமி முதலில் வந்ததும் செழியன் இடம் பாக்கியா அறிமுகப்படுத்துகிறார் பிறகு எழில் ஜெனி என அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். மேலும் பாக்யாவிற்கு திருமணம் ஆகி இரண்டு பசங்கள் இருப்பதும் பேத்திகள் இருப்பதும் பழனிச்சாமியால் நம்பவே முடியவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாக்கியா அவருக்கு மாமியாரை நினைத்து பயங்கர நடுக்கம் ஏனென்றால் கோச்சிங் சென்டர் போனது இதுவரை மாமியார் ஈஸ்வரிக்கு தெரியாது ஆனால் தற்பொழுது தெரியவந்து விட்டதால் ஈஸ்வரி கோபித்துக் கொண்டு கிளம்புகிறார்கள் அது மட்டுமில்லாமல் போகும்பொழுது இன்னும் எதையெல்லாம் மறைத்துள்ளாய் என ஒரு கேள்வியை கேட்டு விடுகிறார்.

அதற்குள் கோபி தன்னுடைய மகளை கூப்பிட்டு செல்வதற்காக அங்கு உள்ள கேண்டின் வருகிறார் அந்த சமயம் பார்த்து பழனிச்சாமி பாக்யாவிடம் உங்களுக்கு என்ன 30 வயது இருக்குமா என கேட்கிறார் இதனை கேட்ட கோபி நெஞ்சை பிடிக்காத குறையாக ஆடி போய் நிற்கிறார் அதுமட்டுமில்லாமல் அவன் ஏன் இப்படி சொல்லுகிறான்? அதை பார்த்து பாக்கிய வெட்கப்படுகிறார் என கோபி அனைத்தையும் பார்த்து கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா என கேட்கும் அளவிற்கு ஆசாடு வழிந்து கொண்டிருக்கிறார்கள்.

உடனே கோபி அங்கு நிற்பதை பார்த்த ஜெனி கோபியை அழைத்து குங்குமம் வைத்து லட்டு எல்லாம் கொடுத்து அசத்துகிறார்கள் மேலும் கோபியிடம் இனியா நீங்க போங்க டாடி நான் தாத்தா கூட வந்து விடுகிறேன் என கூறி விடுகிறார் அதனால் கோபி கிளம்பப் போகிறார் கிளம்பிய உடன் எதிர் எதிரே ராதிகா வந்து நிற்கிறார் அப்புறம் என்ன ராதிகா பத்திரகாளி ஆட்டம் தான் ஆடுகிறார் பாக்கியா என்னை அவமானப்படுத்திட்டு இருக்காங்க இப்ப நீங்க இங்கே குங்குமம் வைத்து கைல லட்டு வேற வாங்கிட்டு வரீங்களா என கோபியிடம் தன்னுடைய ஆக்ரோஷத்தை காட்டுகிறார்.

கோபி கையில் இருக்கும் லட்டை பிடுங்கி கோபியின் வாயில் திணித்துவிட்டு ராதிகா கோபமாக கிளம்புகிறார். இதை பார்த்த ரசிகர்கள் உன் நிலைமை ரொம்ப பாவம் வீட்டுக்கு போய் இன்னும் என்னென்ன எல்லாம் நடக்க போகுதோ என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.