விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மருத்துவமனையில் இருக்கும் இனியவை கோபி வீட்டிற்கு அழைக்கிறார்.
ஆனால் இனியா கோபி பிடித்திருக்கும் கையில் இருந்து வெளியே வந்து நான் அம்மா கூட போவேன் என அம்மா பாக்யா கையை பிடிக்கிறார் இதனால் கோபி கண்ணீரில் மிதக்கிறார் எவ்வளவு கெஞ்சியும் இனியா கோபியிடம் செல்ல மறுக்கிறார். அதனால் இனியா தான் உங்க கூட வரலன்னு சொல்லிட்டால இனி ஏன் நிக்கிறீங்க நீங்க கிளம்பலாம் என அனைவரும் கூறுகிறார்கள்.
உடனே இனியா பாக்கியா எழில் தாத்தா என அனைவரும் வீட்டுக்கு கிளம்பும் பொழுது அப்பொழுதும் கோபி வந்து இனியா நீ அப்பா செல்லம் தானே அப்பா கூட வா என கூற இல்ல டாடி நான் அம்மா கூட போறேன் பாய் என ஒரே வார்த்தையை சொல்லி முடித்து விடுகிறார் அவர் கூறிய வார்த்தை கோபி தலையில் பாரங்களை போட்டது போல் இருக்கிறது.
பின்பு கோபி வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார் ராதிகா எவ்வளவு சொல்லியும் சமாதானம் செய்யும் முடியவில்லை கோபி நீ போய் சாப்பிடு எனக்கு பசிக்கல எனக் கூறிக் கொண்டிருக்கிறார் என் மேல தான் தப்பு என்று நினைக்கிறாயா கோபி என ராதிகா கேட்க இல்ல ராதிகா நீ கொஞ்சம் சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணி இருக்கலாம் சண்டை போடாமல் இருந்திருக்கலாம் என கோபி கூறுகிறார்.
அதேபோல் பாக்யா வீட்டில் அனைவரும் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இனியா நான் இனி அங்கு போக மாட்டேன் என கூறுகிறார். உடனே இனியா என்னுடைய டிரஸ் போனை அனைத்தையும் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என கூற அதற்கு தாத்தா நான் போய் எடுத்துக் கொண்டு வருகிறேன் என கூறுகிறார் உடனே பாட்டி நீங்க மட்டும் ஏன் இனி அங்க இருக்கீங்க நீங்களும் இங்க வந்துருங்க எனக் கூற தாத்தாவும் வருகிறேன் என கூறி விடுகிறார்.
மற்றொரு பக்கம் கோபி ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தாத்தா உள்ளே வருகிறார் உடனே கோபி எழுந்து இனியா எங்கப்பா எங்கே இனியா எப்படி இனி வருவார் அவ வீட்டுக்கு போயிட்டா என தாத்தா கூறுகிறார் உடனே தாத்தா நாங்க டிரஸ் எடுக்க வந்திருக்கேன் எல்லா டிரஸ் எடுத்துட்டு போயிடுறேன் என கூறிக்கொண்டு டிரஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்கிறார் அப்பொழுது மயு தாத்தா இனி நீங்க வர மாட்டீங்களா இனி என்னை யாரும் மாடிக்கு கூட்டிக் கொண்டு போவா என கேட்டு கொண்டு இருக்கிறார்.
உடனே கோபி நீங்களாவது இங்கே இருங்கப்பா நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூற அதற்கு தாத்தா எனக்கு இனி என்ன இங்கே வேலை இனியாவே போயிட்ட நான் இனி இங்கே இருந்து என்ன பண்ண போற என கூறிக்கொண்டு கிளம்பி விடுகிறார் அந்த பக்கம் எழில் அமிர்தா ஜெனி இனியா என அனைவரும் சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் பின்பு பாக்கியா சாப்பாடு எடுத்துக்கொண்டு அனைவருக்கும் ஊட்டி விடுகிறார்.
மற்றொரு பக்கம் கோபி இனியா சென்ரதை நினைத்து குடித்துக் கொண்டே இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.