விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்களின் ஆதரவுடன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு டிஆர்பி-யில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து வரும் நிலையில் அதேபோல் இந்த சீரியலில் நடித்து வரும் கேரக்டர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம். அதாவது குடும்ப இல்லத்தரசிகள் தனது குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் பாக்யாவின் கேரக்டர் அமைந்து வருகிறது. இவ்வாறு நல்ல மனைவி கிடைத்த பொழுதும் அதனை ஏற்றுக் கொள்ளாத கோபி தனக்கு திருமண வயதில் இரண்டு மகன்கள், ஸ்கூல் படிக்கு மகள் இருக்கும் பொழுதும் தனது கல்லூரி காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.
அந்த வகையில் ராதிகாவையும் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியாவின் வீட்டில் குடியேறி உள்ளார். எனவே பாக்யா இந்த வீட்டிற்கு தேவையான 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டால் போய்விடுவீர்களா என்று கேட்டதற்கு கோபியும் சரி என சொல்லி விடுகிறார். பிறகு பாக்கியா பல முயற்சிகளை செய்து கோபித்து தர வேண்டிய பணத்தை கொடுத்துள்ளார்.
எனவே ராதிகா இதற்கு மேல் இங்கு இருந்தா நல்லா இருக்காது என கோபியை அழைத்துக்கொண்டு செல்கிறார். இவ்வாறு இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி என்று கேரக்டரில் சதீஷ் நடித்து வருகிறார். இதனை அடுத்து ராதிகா என்ற கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வரும் நிலையில் தொடர்ந்து சுவாரசியமான கதை அம்சத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் சுசித்ரா பாக்யா கேரக்டரில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 15000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். சதீஷ், ரேஷ்மா 12000, இதற்காகத் தொடர்ந்து செழியன், எழில், ஜெனி கேரக்டரில் நடித்து வரும் பிரபலங்கள் 10,000 ரூபாய் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா 8000 ரூபாயும் சம்பளம் பெறுகிறார்.