பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் பாக்யாவின் ஹோட்டல் சீல் வைக்கப்படுகிறது. பல சதிகளின் காரணமாக தற்போது துவண்டு போய் இருக்கும் பாக்யா மீண்டும் ஹோட்டலை திறப்பேன் என சவால் விடுகிறார்.
அவரை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கும் பெண்களும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்த சூழலில் பிரச்சினையை தீர்ப்பதற்காக பாக்யாவுக்கு பல லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதனால் வீட்டில் இருக்கும் நகையை அடகு வைக்க நினைக்கிறார்.
இந்த விஷயத்தை அவர் தன் மாமியாரிடம் கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என தாலியை பாக்யாவிடம் கொடுத்து அடகு வைக்க சொல்கிறார். இதனால் பதறிப் போகும் அவர் இது மாமாவின் நினைப்பாக உங்களிடம் இருக்கிறது.
இதை கட்டும் போது அவர் உங்களுக்கு கொடுத்த வாக்கை கடைசி மூச்சு வரை காப்பாற்றி விட்டார். அவருடைய ஞாபகமாக உங்களிடம் இருக்கட்டும் என்னுடைய பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என சொல்லி விடுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க செழியன் தன் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து அம்மாவுக்கு கொடுக்க நினைக்கிறார். ஆனால் எழில் தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என கண்கலங்கியபடி இருக்கிறார்.
அவருக்கு தைரியம் சொல்லும் பாக்யா நகையை பேங்கில் அ வைப்ப போல் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் பிறகு அவர் பிரச்சனையை தீர்த்து மீண்டும் ஹோட்டலை புதுப்பொலிவோடு திறப்பது தான் அடுத்தடுத்த வாரங்களில் காட்டப்பட இருக்கிறது.