இளைஞர்களை கவரும் வகையில் சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லதரசிகள் மற்றும் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சுவாரசியமான கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
தற்பொழுது கோபி தனது 25 வருட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.அவர்களுக்கு விரைவில் திருமணமாக உள்ளது இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் ஒரு பெண்ணை தொடர்ந்து நான்ங்கு இடங்களில் பார்த்ததால் அவளின் மீது காதல் ஏற்பட்டு தற்பொழுது வரை இன்னும் திருமணம் செய்துகொள்ள போராடி வருகிறான் எழில்.
அமிர்தாவுடன் நண்பனாக பழகி வந்த எழில் சிறிது காலம் கழித்து தனது காதலை வெளிப்படுத்தினார். அப்பொழுது அமிர்தா மறுத்தாலும் சமீபத்தில் எழிலின் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலர ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சீரியல் கொஞ்சம் டுவிஸ்ட் வைக்கலாம் என்று நினைத்த இயக்குனர் எழிலின் கல்லூரி தோழியாக ஜானு என்ற கேரக்டரை அறிமுகப்படுத்த உள்ளார்.
ஜானு அமிர்தாவை உசுப்பேற்றும் வகையில் எழிலை மிகவும் ஒட்டி உரசுவது கைகோர்த்து நடப்பது அருகில் அமர்வது என தொடர்ந்து செய்து வருவதால் அதனை அமிர்தாவால் பார்க்க முடியவில்லை. அதை பார்த்துவிட்டு அங்கிருந்து விலகுகிறார் எனவே சந்தேகப்பட்டு எழில் என்மீது காதல் ஏற்பட்டுள்ளதா எனக் கேட்க இருக்கிறான்.
இருந்தாலும் மற்றொரு பக்கம் எழில் மற்றும் ஜானு இருவரும் நல்ல ஜோடி என நினைத்து அதில் இருந்து அமிர்தா விலகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக எழில் அமிர்தாவை விடமாட்டான் ஏனென்றால் அமிர்தாவின் குடும்பத்தினரையும் குழந்தையையும் மிகவும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் எழில் நோக்கம்.