பாக்கியாவை ஜெயிலுக்கு அனுப்பிய ராதிகா.! இனிவரும் எபிசோட்.

baakiya lakshmi 3
baakiya lakshmi 3

விஜய் டிவியால் ஒளிபரப்பாகி வரும்  பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியல் வெகுளித்தனமான குடும்பத்தலைவியை தந்திரமான கணவன் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இப்படிப்பட்ட  நிலையில் தற்பொழுது கோபி மாற்றம் ராதிகா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள்.

ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் திருமணமான பிறகு பாக்கியா தன்னம்பிக்கை விடாமல் தனது குடும்பத்திற்காக உழைத்து வருவாள் பிறகு  ராதிகா முதல் திருமணம் தான் இப்படி ஆகிவிட்டதே இரண்டாவது கணவரை விட்டு விடக்கூடாது என பாக்கியாவிற்கு  வில்லியாக  இருப்பார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பாக்யா மாற்றம் ராதிகா இருவரும் இணைந்து 100க்கு குழந்தைகளுக்கு ஆசிரமத்தில் உணவு அளிக்கும் ஆர்டரை எடுத்திருந்தார்கள். ஆனால் அந்த உணவை எடுத்துக்கொண்டு செல்வி தான் ஆசிரமத்தில் கொடுத்தாள். ராதிகா மற்றும் கோபி இருவரும் வீடு திரும்பிய பிறகு ஆசிரமத்தில் இருந்து போன் வருகிறது அதில் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டதில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக  கூறுகிறார்கள்.

பிறகு அந்த உணவு செய்தவரை போலீஸ் அழைத்து வருமாறு கூறும் நிலையில் ராதிகா பாக்கியாவிடம் இதனை கூறுகிறாள். பிறகு பாக்கியா செய்தது தவறு என கோர்ட் உத்தரவு செய்து பாக்கியாவை ஜெயிலில் அடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய எபிசோடு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.