விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகத்தில் டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்டாக இருப்பதால் இந்த நாடகம் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வருகிறது . போன வார எபிசோடில் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் ஜெயிலில் இருந்த நிலையில், இதற்கு காரணம் ராதிகா தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பாடு செய்து தர வேண்டும் என்று ஆர்டரை பாக்கியாவிடம் தருகிறார்,
அங்கு பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகள் மயங்கி விழுந்தார்கள் என்பதுதான். ஆனால் அது உண்மை அல்ல குழந்தைகளுக்கு அங்கு யாரோ லட்டு கொடுத்துள்ளனர் அதில் தான் விஷம் இருந்தது இன்று நிரூபிக்கப்பட்டதால், பாக்கியாவை குற்றவாளி இல்லை என்று நிரூபித்து வெளியே எடுக்கிறார் எழில் இப்படி ஒரு ட்விஸ்டுடன் போன வார எபிசோட் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து கோபி பாக்கியாவை வெளியே எடுக்க எவ்வித உதவியும் புரியாததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற கோபியின் அம்மா கோபியை வீட்டை விட்டு வெளியே செல் என்று கூறியது ரசிகர்களுக்கு அடுத்த டுவிஸ்டாக அமைந்தது.
இப்படி டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்த இந்த நாடகம் தற்பொழுது மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்தது அது என்னவென்றால், ராதிகா பாக்யாவின் மீது தவறில்லை என்று அறிந்து பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க அவரது வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல தயாரானபோது கோபியின் அப்பா கோபியும் பாக்கியமும் திருமணம் செய்து கொண்ட போட்டோவை ராதிகாவிடம் காண்பிக்கிறார், இதைப்பார்த்த ராதிகா இவர்தான் பாக்கியாவின் கனவரா என்று மிக அதிர்ச்சியுடன் மனதில் நினைத்துக் கொள்கிறாள், இதை பார்த்த ரசிகர்கள் இனி என்னவெல்லாம் நடக்கும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.