கோபியை டீச்சர் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ராதிகா.! அதிர்ச்சியில் பாக்கியா.!

baakiya lakshmi 2
baakiya lakshmi 2

குடும்பத்தலைவியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் குடும்ப இல்லத்தரசிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமைகிறது. ஏனென்றால் கண்மூடித்தனமாக தனது கணவனை நம்பி வரும் நிலையில் அவன் எப்படி எல்லாம் தனது வெகுளியான மனைவியை ஏமாற்றி வருகிறான் என்பதை கூறும் வகையில்தான் இந்த சீரியல் அமைந்துள்ளது.

இவ்வாறு உலகில் உள்ள அனைத்து ஆண்களும் அப்படி இல்லை என்றாலும் ஒரு சில ஆண்கள் தனது மனைவியை இப்படி ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அவர்களை தாக்கும் வகையில் இந்த சீரியல் அமைந்துள்ளது.

இவ்வாறு பாக்கியா கண்மூடித்தனமாக தனது கணவனை நம்பி வரும் நிலையில் கோபி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்து விட்டு தற்போது தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறான்.  எனவே பல திட்டங்களையும் தீட்டி எந்த பிரச்சனையில் மாட்டினாலும் அதிலிருந்து தப்பித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கோபி எனது இளைய மகன் எழில் மற்றும் தனது அப்பா ராமமூர்த்தி இருவரிடமும் வசமாக சிக்கினான் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்தான். எழில் மாற்றம் ராமமூர்த்தி இருவரும் தனது குடும்பத்திடம் சொன்னால் அனைவரும் வருத்தப்படுவார்கள் என்று கூறாமல் மனதிற்குள்ளே வைத்து புழுங்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராதிகா மற்றும் கோபி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ராதிகா நாம் ஒரு இடத்திற்குப் போவோம் என்று கூற கோபி ரெஸ்டாரன்ட் தான என கேட்கிறான் இல்லை டீச்சர் வீட்டிற்கு என்று கூறியதும் திடீரென்று பிரேக் போட்டு விடுகிறான். அங்கு போக வேண்டாம் என்று கூறுவதற்காக மழுப்பி வருகிறான்.