விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகா பாக்கியாவின் வீட்டில் தங்கி வருவதனால் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.
போதாக்குறைக்கு ராதிகாவின் அம்மா மையூவையும் ராதிகா கோபியுடன் அழைத்து வந்து விடுகிறார். பாக்யா மயூவை ஏற்றுக்கொண்ட நிலையில் ராதிகாவிற்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி பேசி வருகிறார்கள். இதனை அடுத்து கோபி மயூக்கு சொல்லி தராதா இனியாவிற்கு சொல்லித் தரதா என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் இனியா படித்துக் கொண்டிருக்கும் நிலையில் மயூவிற்கு தூக்கம் வருகிறது ஆனால் லைட் ஆப் பண்ணினால் தான் தூங்க முடியும் என்பதற்காக சிரமப்பட்டு வருகிறார். மையூவை பார்த்த கோபி நீ தூங்கு மையூ எனக் கூற எனக்கு லைட் ஆப் பண்ணாத தூக்கம் வரும் என சொல்கிறார்.
கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என கூற இந்த நேரத்தில் ராதிகாவும் வர லைட் ஆப் பண்ண வேண்டும் என சொல்ல குழந்தை படிச்சுக்கிட்டு இருக்காளே எப்படி லைட் ஆஃப் பண்ண முடியும் அப்படியே படுத்துக்கொள் என சொல்ல ராதிகாவும் படுத்து கொள்கிறார். பிறகு எப்படியாவது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டும் என்று கோபியின் காலில் வேகமாக கையை தூக்கி போட எதற்கு இப்ப என்ன அடிச்ச என கோபி கேட்கிறார்.
ராதிகா தெரியாமல் கைப்பட்டு விட்டது என சொல்ல பிறகு கோபி வலி தாங்க முடியாமல் கதறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் செழியன் வீட்டிற்கு வந்தவுடன் லேப்டாப்பை மூடி வைக்க ஜெனி எதற்கு முடி வைக்கிறாய் வொர்க் ப்ரம் ஹோம் தான வேலை செய்யயென சொல்ல இல்லை உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் என கூறிக் கொண்டிருக்கிறார்.
பிறகு செழியனுக்கு போன் வர யாரு அந்த பெண் க்ளைண்டா என கேட்கிறார் அதற்கு ஆமா நீயும் கேளு என கூறிவிட்டு போன் ஸ்பீக்கரில் போட ஆபிசர் போன் செய்கிறார். இவ்வாறு அந்த மாலினி போன் பண்ணி இருந்தாங்க என்னமோ நம்ப சைடுல கம்யூனிகேஷன் ப்ராப்பரா இல்ல என சொல்லி இருந்தாங்க இந்த டீல முடிச்சுடுறேன்னு சொன்னீங்க ஆனா முடிக்கவில்லையே என கேட்க சார் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன் ஆனால் அவங்க ஒர்க்க பத்தி பேசாம தேவையில்லாத மத்த எல்லாத்தையும் பேசுறாங்க என கூறுகிறார் இவ்வாறு செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் ஆஃபீசரிடம் மாட்டிக் கொள்கிறார்.