விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் பாக்யா இருவருக்கும் விவாகரத்தான நிலையில் கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் பாக்கியா ஒரு வருடத்திற்குள் 40 லட்ச ரூபாய் பணத்தை தருவதாக சபதம் போட்டுள்ளார்.இப்படிப்பட்ட நிலையில் ராதிகா எப்படியாவது தன்னை திருமணம் செய்து கொண்டு ஏற்றுக் கொள்வார் என கோபி தற்பொழுது ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க பாக்கியா வீட்டில் இருக்கும் அனைத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொள்ளும் நிலைமையில் இருந்து வருவதால் தற்பொழுது இனியாவின் கல்வி கட்டணத்திற்கு தன்னுடைய வளையல்களை அடகு வைத்து பணத்தை கட்ட பள்ளிக்கு செல்கிறார் ஆனால் இதற்கு முன்பே கோபி இனியாவிற்கான ஸ்கூல் பீஸ்சை கட்டி விடுகிறார்.
இதனை அறிந்துக் கொண்ட பாக்யா வீட்டிற்கு வருகிறார் உடனே கோபி போன் செய்து பணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் ஆனால் நீ எல்லாம் யாரையாவது ஒட்டிக்கிட்டு சார்ந்து வாழ்வதற்கு தான் லாக்கி என்று பாகியவை கேவலமாக சீண்டு விடுகிறார். இதனால் பாக்கியா இதற்கு மேல் குடும்பத்தில் இருக்கும் பண பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக மசாலா பொடி அரைத்தும், கேரியர் சாப்பாடு கட்டி கட்டிக் கொடுக்கலாம் எனவும் முடிவு செய்கிறார்.
இதற்கு மேல் பெரியதாக செய்ய வேண்டும் என்பதற்காக மீண்டும் கேட்டரிங் தொழிலை தொடங்குகிறார். இதனை அறிந்து கொண்ட ஈஸ்வரி இந்த குடும்பத்தின் மீது கோபிக்கு இன்னும் அக்கறை இருக்கிறது எனவே மறுபடியும் நிரூபித்து காட்டியிருக்கிறான் பாரு என மிகவும் பெருமையாக பேசுகிறார் மேலும் ராதிகாவின் அண்ணண்,அம்மா இருவரும் கோபியை பாக்கியா தூக்கி எறிந்தாலும் பொறுப்பிலிருந்து விலகாமல் இருக்கிறார்.
ஆகையால் கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொள் ராதிகா என்று ராதிகாவின் அண்ணன் கூறுகிறார். ஆனால் ராதிகா இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை சில நாள் அவகாசம் தேவைப்படுகிறது அதன் பிறகு கோபி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ராதிகா சொல்கிறார். இதோடு இந்த எபிசோட் முடிவடைகிறது.