விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. நேற்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகா இவர்களுடைய திருமணத்திற்கு அவருடைய அண்ணன், அம்மா ராதிகாவை பேசி சம்மதிக்க வைக்கிறார்கள்.
பிறகு கோபி ஸ்கூல் இருக்கு சென்று அங்க இனியாவை சந்திக்கிறார் பிறகு கோபியை பார்த்தவுடன் இனியா கதறி அழுகிறார் பிறகு கோபி அப்பா உன்னை விட்டு செல்ல மாட்டேன் என ஆதரவு கூறுகிறார் பிறகு இன்னும் கொஞ்ச நாட்களில் நானே வந்து உன்னை அழைத்து செல்வேன் என்று கூறிவிட்டு இனியாவை கையோடு அழைத்துக் கொண்டு ஊர் சுற்றுவதற்காக கிளம்புகிறார்கள்.
இதனைப் பற்றி பாக்யாவிடமோ அல்லது அவர்களின் குடும்பத்தினர்களிடமோ கூறாமல் இனியாவை அழைத்துக் கொண்டு சென்றதால் இவ்வளவு நேரம் ஆகியும் பள்ளி விட்டு தன்னுடைய மகள் வரவில்லையே என ஓட்டுனரை அழைத்து விசாரிக்கிறார் பாக்யா.அப்பொழுது டிரைவர் இனியா பள்ளி வேணில் வரவில்லை என தெரிவித்ததும் பாக்யா பதட்டமடைகிறார் இதற்கு பாக்யா தான் காரணம் என பாக்யாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் திட்டுகிறார்கள்.
இந்த நேரத்தில் ஜெனி பாக்யாவிடம் நீங்கள் சொன்னது போல அப்ளை செய்து விட்டேன் என கூற அதனை கவனிக்காமல் இருந்து வரும் பாக்கியா மகளை நினைத்துக்கொண்டு மிகவும் பயப்படுகிறார். இந்த நேரத்தில் கோபி செழியனுக்கு போன் செய்து உங்களை எல்லோரையும் மிஸ் செய்கிறேன் இனியாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
எனவே அவளை வெளியில் அழைத்து சென்றுள்ளேன் இதனை வீட்டில் தெரிவிக்க என கூறியுள்ளார் பின்னர் வீட்டிற்கு திரும்பியதும் செழியன் வீட்டிற்கு வெளியில் காத்திருக்கும் ஜெனியிடம் கூறாமல் உள்ளே இருக்கும் தன் பாட்டியிடம் அப்பா இனியாவை அழைத்து சென்று உள்ளார் என கூறுகிறார்.இது தெரியாத ஜெனி மற்றும் பாக்யா இனியா இதுவரையிலும் வீட்டிற்கு வராத காரணத்தினால் போலீசில் புகார் அளிக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.