கோபியிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன ராதிகா.! உறுதுணையாக இருக்கும் அம்மா,அண்ணன்..

baakiya lakshmi
baakiya lakshmi

விஜய் டிவியில் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் குடும்ப இளவரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ஏனென்றால் ஒரு குடும்பத் தலைவி தன்னுடைய ஆசைகளை செய்ய முடியாமல் தன்னுடைய குடும்பத்தினர்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறார். மேலும் தன்னுடைய கணவனுக்கு மிகவும் உண்மையாக இருக்கும் நிலையில் அந்த கணவன் திடீரென தன்னுடைய முன்னால் காதலியை சந்திக்க தன்னுடன் 25 வருடம் மனைவியாக வாழ்ந்த பாக்யாவை வேண்டாம் என கூறி விடுகிறான் கோபி.

இவ்வாறு இப்படிப்பட்ட கதைகளத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது பாக்கியா கோபி செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவருக்கு விவாகரத்து அளித்துள்ளார் மேலும் கோபி வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாக்யா பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குடும்பத்தில் இருப்பவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறார் பாக்யா  ஆனால் இவருடைய மூத்த மகன் செழியன் பணம் இருந்தும் யாருக்கும் செலவு செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் மேலும் கோபியின் அம்மா ஈஸ்வரி நீதான் கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன நீதான் அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என குத்தி காட்டி சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு தற்பொழுது இவருக்கு உறுதுணையாக இவருடைய இளைய மகன் எழில் மட்டும் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் எழிலின் உதவியோடு பாக்கியா தன்னுடைய தொழிலை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்துள்ள நிலையில் கோபி தொடர்ந்து ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் கோபியை நேரடியாக வரவழைத்து இருவரும் பேசுகிறார்கள்.

அப்பொழுது ராதிகா தன்னை திருமணம் செய்து கொள்ள ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் என கூறுகிறார் மேலும் இன்னொரு முறை தன்னையும் தன்னுடைய மகளையும் இப்படி சூழ்நிலைக்கு கொண்டு வர மாட்டீங்களே என கேட்க அதற்கு கோபி சத்தியமாக அது போன்ற ஒரு சூழ்நிலையை கொண்டு வரமாட்டேன் என உறுதி அளிக்கிறார் இவ்வாறு இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.