விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா மற்றும் கோபி இருவருக்கும் விவாகரத்தான நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவிலிருந்து வந்தார் மேலும் ராதிகாவும் சில காலங்கள் இதற்கு சம்மதிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது ராதிகா கோபி இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
மேலும் இவர்களுடைய திருமணம் முதல் திருமணம் போலவே மிகவும் கோலாகலமாக நடக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த ராதிகா திடீரென கோபியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் திருமண மேடையை விட்டு இறங்குகிறார். மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு பாக்யா தான் சமைக்கும் ஆர்டரை எடுத்திருக்கிறார் கோபிக்கும் ராதிகாவிறகும் திருமணம் நடக்கிறது என்பது தெரிந்தும் எடுத்த ஆர்டரை நல்லபடியாக முடிந்து தர வேண்டும் என்பதற்காக எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் இருந்து வருகிறார்.
மேலும் அப்படி இருந்தால் தான் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும் என்பதிலும் கவனமாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய கணவரின் திருமணத்திற்கு சமைத்து தரும் நிலைமை வந்து விட்டது என பாக்யா வருத்தமடைகிறார். கோபி ராதிகா இருவரும் மனக்கோளத்தில் மேடையில் நிற்க இதனை பார்த்து கண் கலங்குகிறார். பிறகு கோபிக்கு திருமணம் நடப்பதை அறிந்த கோபியின் அப்பா ராமமூர்த்தி மண்டபத்திற்கு வந்து கோபியுடன் சண்டை போட கோபி ராமமூர்த்தியை தள்ளிவிட்டு அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
இவ்வாறு பெத்த தகப்பனையே திருமண மண்டபத்தை விட்டு கீழே தள்ளிவிட்டது பாக்யாவிற்கும் பெரிதும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கோபியை முறைத்து பார்க்கிறார் பிறகு ராமமூர்த்தியை வீட்டிற்கு போகுமாறு கூறுகிறார் மேலும் இந்த ஆர்டரை முடித்து விட்டேன் நானும் வீட்டிற்கு வந்து விடுகிறேன் என சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் இப்படி ஒவ்வொருவராக திருமணத்தில் வந்து ரகளை செய்து வருவதால் ராதிகா மேடையில் இருந்து இறங்கி விடுகிறார்.
பிறகு ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் சமாதானப்படுத்தி மறுபடியும் மேடைக்கு அனுப்பி வைக்கிறார்கள் இனிமேல் ராதிகாவின் மனம் புண்படும்படி உங்களது குடும்பத்தினர் யாரும் வந்து தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று கோபியை எச்சரிக்கிறார் மாமியார். இவ்வாறு என்ன நடந்தாலும் தன்னுடைய மனதை கல்லாகிக் கொண்டு பாக்கியா வந்தவர்கலுக்கு உணவுகளை அளித்து சரியாக பார்த்துக் கொள்கிறார்.