பாக்யாவை பார்த்துவிட்டு கோபி செய்த கேவலமான செயல்.! மானங்கெட்ட கேள்வி கேட்ட செல்வி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்த கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பிள்ளைகளுக்காக மீண்டும் திரும்பி வீட்டிற்கு வந்துவிடுவார் என அனைவரும் நினைத்து வருகிறார்கள் ஆனால் இதனை சாக்காக வைத்துக் கொண்டு கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்து உள்ளான்.

ராதிகாவிடம் தன்னை அப்பாவி போல் காட்டிக்கொண்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன் நீயும் என்னை ஏமாற்றி விடாதே எனக் கூறி ராதிகாவின் மனதை மாற்றியுள்ள நிலையில் இவர்களுக்கு தற்பொழுது திருமணம் நடக்க இருக்கிறது. மேலும் பாக்கியா திருமணத்திற்கு சமைப்பதற்கான சமையல் ஆர்டர்களை எடுத்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் மிகப்பெரிய திருமணத்திற்கு சமையலாடர் கிடைத்திருக்கும் நிலையில் அவர் நல்லபடியாக இதனை முடித்துக் கொடுக்க வேண்டும் என ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் வேலைக்காரி செல்வி ராதிகாவின் திருமணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பாக்யாவை திருமணம் மேடையில் ஜோடியாக இருக்கும் ராதிகா கோபி முன்பு நிறுத்துகிறார். இதனை பார்த்தவுடன் கண்கலங்கிய பாக்யா பிறகு கோபியை முறைக்கிறார் இதனை பார்த்தவுடன் கோபி ராதிகாவின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போல் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் செல்வி உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லையா சார் நீங்க ஒரு தில்லாலங்கடினு தெரியும் ஆனால் மனைவியை விட்டுவிட்டு பிள்ளைகளை கூட வேண்டாம் என கூறிவிட்டு இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று மிகவும் மோசமாக பேசுகிறார் பிறகு கோபி பாக்கியா என்னுடைய பொண்டாட்டி இல்லை அவரை விவாகரத்து செய்து விட்டேன் ராதிகா தான் என்னுடைய மனைவி என்று பேசுகிறான் அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறார் பாக்கியா.

செல்வி உடனே இந்த கல்யாணத்துக்கு சமைத்து ஒன்றும் கொடுக்க வேண்டாம் எனக் கூற அப்ப நான் தான் கல்யாணத்தை முதலில் நிறுத்தணும் என்று கோபத்தில் காத்திருக்கிறார். ஆனால் பாக்யா வந்த பெண்களுக்கு இந்த ஆர்டர் முக்கியம் என்று உணர்த்துகிறார். மேலும் கிடைத்த ஆடரை மிகவும் சிறப்பாக நடத்தி தர வேண்டும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனவே வேலையை முடித்துவிட்டு கிளம்பலாம் என செல்வி மற்ற பெண்களை சமாதானப்படுத்துகிறார்.