விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. தற்பொழுது கோபி ராதிகா இருவருக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தடபுடலாக நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் கோபி வெறி பிடித்தது போல் திரிந்து வருகிறார்.
அதாவது கோபி தன்னுடைய அம்மாவிடம் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்ய போவதை கூறிய நிலையில் ஈஸ்வரி எப்படி நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்பதை நான் பார்க்கிறேன் என சவால் விடுகிறார்.இந்த தகவலை தன்னுடைய கணவர் ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி கூறிய நிலையில் ராமமூர்த்தி இதனைப் பற்றி பாக்யாவிடம் எதுவும் கூற வேண்டாம் அவள் மனம் உடைந்து போவாள் என கூறுகிறார்.
இதனை தொடர்ந்து ராமமூர்த்தி அவன் எப்படி திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்பதை பார்க்கலாம் எனக் கூறிவிட்டு கோபியை சந்திப்பதற்காக செல்கிறார். அங்கு கோபியை சந்தித்து பேசும் பொழுது நம்ம குடும்பத்தை பார்த்துக்க யாருமே இல்லை இனியாவின் நிலைமையை யோசித்துப் பார் என கூற அதற்கு கோபி இந்த எமோஷனல் டயலாக் எல்லாம் வேணாம் என கூறி விடுகிறார்.
பிறகு இந்த முடிவு மிகவும் தவறு என ராமமூர்த்தி கூற அதற்கு கோபி யார் என்ன செய்தாலும் ராதிகாவுடன் எனக்கு நடக்கும் திருமணத்தை யாராலும் தடுக்க முடியாது எனவும் பாக்கியாவிற்கும் எனக்கும் இருந்த உறவு எப்பொழுதும் முடிந்து விட்டது எனவும் கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எப்படி கோபி ராதிகாவின் திருமணத்தை நிறுத்தலாம் என ராமமூர்த்தி யோசிக்கிறார்.
பிறகு கோபி கிளம்பி விட ராதிகா மிகவும் மகிழ்ச்சியாக புது பெண் போல் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு கிளம்புகிறார். மேலும் பாக்கியாவும் தனக்கு பெரிய ஆடர் கிடைத்துவிட்டது என சமைப்பதற்காக மகிழ்ச்சியில் இருந்து வருகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.