விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் இரண்டாவது திருமணம் நடக்க இருக்கும் நிலையில் திருமண வேலைகள் மிகவும் தடபுடலாக நடைபெற்று வருகிறது. கோபி ராதிகா இருவரும் தங்களுக்கு திருமணமாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாக்யாவின் இளைய மகன் எழில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழ்ந்து வரும் அமிர்தாவை உயிர்க்கு உயிராக காதலித்து வருகிறார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழில் படம் ஒன்றை தயாரிக்க இருந்த நிலையில் அந்த வாய்ப்பு நழுவி போனது.
ஆனால் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியை இதற்கு முன்பு எழிலுக்கு தெரியும் என்பதால் நழுவிப்போன படம் அவரால் மீண்டும் எழிலுக்கு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எழில் வர்ஷினிக்கு நன்றி கூறுகிறார். மேலும் எழிலுடன் பழகுவது வர்ஷினிக்கு பிடித்து போகிறது எனவே அவருடன் இன்று இரவு தனியாக பைக்கில் சுத்த நினைத்த வர்ஷினி தன்னுடைய கார் ரிப்பேர் ஆனது என எழிலிடம் கூறி பிறகு அவருடன் சேர்ந்து சுற்றுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பைக்கில் எழிலின் தோளில் கையை போட்டு மிகவும் நெருக்கமாக வர்ஷினி அமர்ந்திருந்த நிலையில் அதனை அமிர்தாவின் மாமனார் பார்த்து விடுகிறார். இதனைப் பற்றி அமிதாவிடம் கூற இது பெரிய பிரச்சனையாக ஆகிறது மேலும் அமிர்தாவின் மாமனார் மாமியாருக்கு எழிலின் மீது சந்தேகம் ஏற்படுகிறது அவன் அப்பன் போலவே மகனும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறான் என நினைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் வர்ஷினிடம் எழில் அமிர்தா என்னுடைய காதலி என்றும் அதனை தாண்டி என்னுடைய மனைவி என்றும் கூறுகிறார். இவ்வாறு எழிலுக்கு தன்னுடைய அம்மா மீது அமிர்தாவின் மீதும் இருக்கும் பாசத்தை பார்த்து வர்ஷினி நெகிழ்ந்து போகிறார் மேலும் எழிலை மிகவும் பிடித்துப் போக அவருடன் நட்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.