பொதுவாக விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி பாக்யா கேட்டரிங் தொழிலில் பெரிசாக சாதிக்க வேண்டும் என்பதற்காக துடித்து வருகிறார் மேலும் பெரிய திருமண ஆரடைகளும் கிடைத்திருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.
பிறகு செழியன் மனைவி ஜெசி பாக்யாவிற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார் மேலும் இதற்கு மேல் வேலைக்கு போகலாம் எனவும் முடிவெடுத்துள்ளார் ஏனென்றால் பணம் ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் தன்னால் முடிந்த உதவியை ஆண்ட்டிக்கு செய்யலாம் என முடிவெடுத்துள்ளார். தற்பொழுது பாக்கியா கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துணிச்சலாக செயல்பட்டு அனைவருக்கும் தன்னுடைய மதிப்பை தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.
எனவே தற்போது வெற்றியை அடைய வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் இந்நிலையில் இவருக்கு கோபி ராதிகா இவர்களின் திருமணத்திற்காக சமைத்துக் கொடுக்கும் காண்ட்ராக்ட்டை எடுத்துள்ளார். இவ்வாறு தன்னுடைய கணவரின் திருமணத்திற்கு தானே சமைக்கும் நிலைமை பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது ஆனால் இதுபற்றி பாக்யாவிற்கு தெரியாமல் இருந்து வரும் நிலையில் எதா இருந்தாலும் பரவாயில்லை என ஏற்றுக்கொண்டு கண்டிப்பாக பாக்கியா தன்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கோபி திருமணத்திற்கு கல்யாண பத்திரிகையுடன் புது துணிமணி வாங்குவதற்காக கல்யாண வேலையாக தடபுடலாக நடைபெற்று வருகிறது. எனவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் கோபி தன்னுடைய மகள் இனியாவிற்கு புது துணி எடுத்துக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறான் அதற்கு ராதிகாவும் எந்த மறுப்பது தெரிவிக்கவில்லை.
அவ்வப்பொழுது ராதிகாவின் அம்மா மட்டும் ராதிகாவை தனியாக அழைத்து கோபியை பாக்கியா குடும்பத்துடன் விட்டு விடாதே உன்னுடைய கைக்குள் போட்டுக் கொள் என ராதிகாவிற்கு சொல்லித் தருகிறார். கோபியும் 25 வருடங்களாக பாக்கியாவிற்கு உழைத்துக் கொட்டி விட்டேன் இதற்கு மேல் என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைக்கிறான்.