மகனுக்கு முன்னாடியே தன்னுடைய திருமணத்திற்கு பத்திரிகை அடித்த அப்பன்.! பாக்யாவை கேவலப்படுத்தும் ஈஸ்வரி..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி  தற்பொழுது விவாகரத்து பெற்று வீட்டை விட்டு வெளியேறி உள்ள கோபி தனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் 25 வருடமாக வாழ்ந்து வந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்.

மேலும் பல பிரச்சினைகள் ராதிகா சந்தித்துள்ள நிலையில் இதற்கு மேல் எந்த அவமானத்தையும் தாங்க முடியாது என்பதற்காக ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்ள முடிவடைகிறார்.அடுத்த முகூர்த்தத்திலேயே இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள் ராதிகாவின் குடும்பத்தினர்களுடன் மிகவும் தடபுடலாக திருமணம் நடக்க இருக்கிறது.

மேலும் புது மாப்பிள்ளையாக தயாராகி வருகிறார் கோபி இவ்வாறு ராதிகாவின் மகளும் கோபி அங்கிள் அம்மாவை திருமணம் செய்து கொண்டால் இனிமேல் நம்ம கூடவே இருப்பார் எந்த பிரச்சனையும் வராது என மையூ மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.இப்படிப்பட்ட நிலையில் எழில் விதவையாக இருக்கும் அமிர்தாவை காதலித்து வரும் நிலையில் மகனுக்கு முன்பே அப்பன் பத்திரிகை அடித்து திருமணம் நடத்த முயற்சி செய்து உள்ளார்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாக்யா தன்னுடைய குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக திருமண ஆர்டரை எடுப்பதற்காக இன்டர்வியூ சென்றுள்ளார்.அதில் சிறப்பாக பாக்யா செயல்பட்டுள்ள நிலையில் இவருக்கே ஆர்டர்கள் கிடைக்கிறது இதனால் பெருமையாக இருந்து வரும் நிலையில் மாமியார் மட்டும் கோபி இல்லாமல் ஒரு குடும்பத்தின் தலைவனை வெளியேற்றி நீ என்ன பெருசா சாதித்து விடுவாய் என பாக்யாவை திட்டுகிறார்.

இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாக்யா தன்னுடைய தொழிலை முன்னேறி எப்படியாவது அனைவரும் முகத்திலும் கறியை பூச வேண்டும் என முடிவெடுத்துள்ளார் ஒருபுறம் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என யோசித்து வருகிறான்.