தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட கோபி.! ஸ்கூலுக்கு தனியாக நடந்து செல்லும் இனியா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி பாக்கியாவின் வீட்டிற்கு எதிரில் குடிவந்திருக்கிறார். மேலும் கோபி திருமணம் செய்து கொண்டு ராதிகாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணி வந்த நிலையில் அந்த ஆசையில் மண்ணள்ளி போட்டுள்ளார் ராதிகா.

இன்றைய எபிசோடில் இனிய மற்றும் பாக்யாவின் கண் முன்னே ராதிகாவின் மகள் மயூரை கோபி பள்ளிக்கு அழைத்து செல்கிறார். பிறகு இனியாவை பார்த்தவுடன் கோபி வா மா நான் உன்னை ஸ்கூலில் விடுகிறேன் என கூற அதனைக் கண்டு கொள்ளாமல் நடந்து செல்கிறார் இனியா. இவ்வாறு கோபி பாக்யாவை பழிவாங்கும் எண்ணத்தில் இனியாவின் மனதை கஷ்டப்படுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கோபி வீட்டை விட்டு செல்லும் பொழுது இந்த வீட்டிற்க்காக செலவு செய்த 40 லட்சத்தையும் பாக்கியா தருவதாக சபதம் போட்டிருந்த நிலையில் அதில் முதல் தொகையாக 40 ஆயிரம் ரூபாய் அக்கவுண்ட் இருக்கு அனுப்பி வைக்கிறார். இதனை பார்த்தவுடன் கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு கோபிக்கு பாக்கியா போன் போட்டு உங்களுக்கு தர வேண்டிய 40 லட்சத்தில் 40 ஆயிரம் பணத்தை கொடுத்து விட்டேன் மீதி இருக்கும் பணத்தை விரைவில் தருகிறேன் என கூறிவிட்டு போனை வைக்கிறார். உடனே கோபி தன்னுடைய நண்பரிடம் பாக்யா திமிரு பிடித்தவள் என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த நபர் கோபியிடம் மகிழ்ச்சியாக இருக்கிறாயா என கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட ராதிகா கோபிக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல் சாண்ட்விச் ஸ்போர்ட்ஸ் உப்புமா போன்ற டிபன்களை குடிக்கிறார் மேலும் இதனை தொடர்ந்து புதிதாக திருமணமான நிலை என்ற ரொமான்ஸ் செய்த ஜாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோபி இருக்கு அதை இன்னும் நடக்காமல் இருந்து வருகிறது பிறகு கோபிக்கு மதிய உணவை கொடுக்காமல் கடையில் வாங்கி சாப்பிடுங்க என கூறுகிறார். இவ்வாறு ராதிகாவை திருமணம் செய்து கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார் கோவில்.