விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுத்த நிலையில் கோபி ராதிகா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளான்.
அந்த வகையில்கோபி ராதிகாவின் திருமணம் முதல் திருமணம் போலவே மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக கோபியின் அப்பா முயற்சி செய்து வருகிறார் எனவே மண்டபத்தில் சென்று தடுத்த நிறுத்த முயன்ற தந்தையிடம் அவரை பார்த்து கோபி மிகவும் கேவலமாக பேசி மண்டபத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
மேலும் போயா என தந்தையை கீழே தள்ளி விடுகிறார் இதனை பார்த்தவுடன் உச்சகட்ட கோபத்தில் இருந்து வரும் பாக்கியா இப்ப நீங்க உங்க அப்பாவை அவமானப்படுத்தின மாதிரி உங்க பையன் உங்ககிட்ட நடந்துக்க கூடாதுன்னு வேண்டிக்கோங்க என கூறுகிறார். மேலும் நடக்கிற பிரச்சனையினால் ராதிகாவின் அண்ணன் உடனே சமையல் காண்ட்ராக்ட்ரிடம் இப்பொழுதே பாக்யாவை மண்டபத்தில் இருந்து வெளியே போக சொல்கிறார்.
இதை எங்களால் சொல்ல முடியாது என ஓனரை அழைக்கிறார். இதன் காரணமாக ஓனர் பாக்யாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் பிறகு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுக்குமாறு பாக்யா கெஞ்சுகிறார் பிறகு ஓனரும் கோபி கல்யாணத்திற்கு சமைப்பதற்கு அந்த ஆர்டரை கொடுத்து விடுகிறார். இவ்வாறு தன்னுடைய புருஷன் கல்யாணத்துக்கு நான் தான் சமைப்பேன் என உறுதியாக இருந்து வருகிறார் பாக்யா.
மேலும் கோபியின் அப்பாவிடம் மாமா நீங்கள் வீட்டிற்கு போங்க நான் இந்த சமையல் ஆர்டரை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என கூறுகிறார். மேலும் கோபி அவன் கல்யாணத்துக்கு அவங்க அம்மாவ கூப்பிட்டு இருக்காங்க அவ மனசு உடைஞ்சு போயிட்டா என கோபியின் தந்தை கூறுகிறார் பிறகு இப்ப கல்யாணத்தை நிறுத்தி என்ன மாமா பண்ண போறீங்க இதை இத்தோட விட்டுருங்க என பாக்யா கூறுகிறார் மேலும் கான்ட்ராக்ட் பாக்யாவின் கையை விட்டு போகாமல் பாக்யாவிற்கே கிடைத்துள்ளது.