நோ பாலிலும் சிக்ஸ் அடிக்கும் கோபி.! விழி பிதுங்கி நிற்கும் தாத்தா ராமமூர்த்தி.. பாக்யலக்ஷ்மி இன்றைய எபிசொட்

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இனியா ராமமூர்த்தி இருவரும் கோபி ராதிகாவுடன் இருந்து வருகிறார்கள். இதனால் கோபி மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒருபுறம் ராதிகா கோபியை முறைத்துக் கொண்டே இருக்கிறார். திருமணமானதற்கு பிறகு சமைக்காமல் இருந்து வந்த ராதிகா ராமமூர்த்தி இனியாவிற்காக சமைக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் ராமமூர்த்தி இனியா இருவருக்கும் ராதிகா செய்த உணவு பிடிக்காத காரணத்தினால் ராமமூர்த்தி பாக்கியாவின் வீட்டிற்கு சென்று அவர் சமைத்த உணவை தனக்கும் தன்னுடைய பேத்திக்கும் எடுத்து வருகிறார். அந்த உணவை சாப்பிட்டு விட்டு இனியா தன்னுடைய அம்மாவை நினைத்து கண் கலங்குகிறார் மேலும் அவருடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதையும் விரும்பி வருகிறார்.

இதைப் பற்றி கோபியிடம் பேசும் பொழுது அவர் இனியாவை எப்படியாவது சமாளித்து ஒரு கட்டத்தில் தன்னை விட்டு பிரியக்கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். ராமமூர்த்தி எப்படியாவது இனியாவின் மனதை மாற்றி வீட்டிற்கு அழைத்து வரலாம் என முடிவு செய்த நிலையில் கோபி அசால்டாக அடுத்து நொறுக்கி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ஒரு புறம் அமிர்தா எழில் காதலுக்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது அதாவது எழில் தயாரிக்கும் படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலை தான் திருமணம் செய்து கொள்வதாக அமிர்தாவின் வீட்டாரிடம் கூறியிருக்கிறார். இவ்வாறு இதனை தெரிந்து கொண்ட அமிர்தாவின் பெற்றோர் அமிர்தாவை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குடும்பமே சீக்கிரம் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு இடம்பெயர் இருப்பதாக எழிலிடம் சொல்கிறார்கள். இவ்வாறு தன்னுடைய காதலி தன்னை விட்டு பிரிந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் எழிலுக்கு நரக வேதனையாக இருக்கிறது. ஏற்கனவே பாக்கியாவிற்கு எழில் அமிர்தா காதலித்து வரும் விஷயம் தெரியும் நிலையில் விரைவில் குடும்பத்தினர்களிடம் பேசி அனைவர் சமதத்துடன் எழில் அமிர்தாவை சேர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.