விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலை தற்போது மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. காமெடி கலந்த சுவாரசியமான கதையம் சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இரண்டு பொண்டாட்டியை வைத்துக்கொண்டு கோபிப்படும் பாட்டை பார்த்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோபிக்கு ஒரு போஸ்ட் வந்த நிலையில் அந்த வீட்டில் கோபி என்று ஒரு அளே இல்லை என ராமமூர்த்தி கூறிவிட்டார். அந்த நேரத்தில் கோபி வீட்டை விட்டு வெளியே வர போஸ்ட்மேனை பார்த்து தனக்கு வந்தா லெட்டர் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் உடனே கோபி என்ற பெயருக்கு வந்திருக்கு ஆனா அந்த வீட்ல அப்படி யாரும் இல்லைன்னு சொல்லிட்டாங்க என போஸ்ட்மேன் இதனால் கோபி ஆத்திரமடைகிறார்.
வீட்டிற்கு வந்த ராதிகாவிடம் புலம்புகிறார் மேலும் ரேஹன் கார்டில் அட்ரஸ் மாத்துங்க எனவும் ராதிகா கூறி இருக்கிறார். ரேஷன் கார்டு பாக்யா வீட்டில் இருப்பதால் கோபி அவருக்கு போன் செய்கிறார் அப்பொழுது ஏன் அட்ரஸை மாத்தி சொன்னிங்க ஓவர் திமிரா என பாக்யாவை கண்டபடி திட்டுகிறார். பிறகு ரேஷன் கார்டு எனக்கு வேணும் எடுத்துக் கொடு என கோபி கேட்க அது எனக்கு தெரியாது எல்லாம் மாமாவுக்கு தான் தெரியும் என பாக்யா கூறி விடுகிறார்.
இவ்வாறு கோபி ராதிகாவுடன் போனில் பேசியிருப்பதை பார்த்து ராதிகா கோபப்படுகிறார். உங்களுக்கு ரேஷன் கார்டு வேணுமா உங்க அம்மா அப்பா யாருக்காவது போன் பண்ணி கேட்க வேண்டியது தானே ஏன் பாக்யாவுக்கு பண்ணிட்டு இவ்ளோ நேரம் பேசுறீங்க என கோபியின் மீது வெறுப்பை கொட்டுகிறார் கல்யாணமான புதியதிலேயே கோபிக்கு இவ்வாறு சிக்கல்கள் வந்துள்ள நிலையில் இனி என்ன பாடுபடப் போகிறாரோ.