விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது ராதிகா கோபி பாக்யாவின் வீட்டில் தங்கிவரும் நிலையில் இதனால் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.
இன்றைய எபிசோடில் பாக்கியா தனது மகள், மருமகள், மகன்கள் என அனைவரிடமும் பேசி சிரித்துக்கொண்டு இருக்கின்றனர். அதாவது தவறாக இங்கிலீஷ் பேசும் பாக்கியா அதனை தனது மகன்கள் திருத்தும் பொழுது இல்லை நான் சொல்வது தான் சரி என பேச பிறகு அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை பார்த்துவிட்டு கோபி என்ன நம்பலை விட்டுட்டு சிரிக்கிறாங்க ராதிகா மட்டும் அவ குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கா நம்மளும் இருக்கலாம் என கூறிவிட்டு செல்கிறார். அங்கு என்ன அப்படி சிரிக்கிறீங்க சொல்லுங்க நானும் சிரிக்கிறேன் எனக் கூறி சேரில் உட்கார எழில் உட்கார விடாமல் அந்த சாரில் தண்ணியை வைக்கிறார்.
பிறகு கோபி தேங்க்ஸ் டா செல்லம் என்ன சொல்லிவிட்டு தண்ணியை குடித்துவிட்டு அமர என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என கேட்கிறார். அதற்கு இனியா அம்மா இங்கிலீஷ் கிளாஸ் போவதை பற்றி பேசிக் கொண்டிருப்பதாக கூற எழில் தேவையில்லாம பேசாத என இனியாவை வாயை மூடச் சொல்கிறார். அதற்கு கோபி இங்கிலீஷ் பேசுவது சின்ன வயசிலிருந்து கத்துகிட்டு வரணும் திடீர்னு கத்துக்கிட்டா ஃப்ளூயண்ட் இங்கிலீஷ் வராது என கூற அதற்கு பாக்கியா எல்லாமே சின்ன வயசுல இருந்து கத்துக்கிட்டா வறோம் இடையில் வந்து கெட்ட பழக்கங்களை கத்துக்க முடியுது என்றால் நல்ல பழக்கங்களையும் கத்துக்க முடியும் எனக் கூற அதற்கு செழியன் உங்களுக்கு புரியலையா அப்பா நீங்க குடிக்கிறது தான் அம்மா சொல்றாங்க என சொல்கிறார்.
இதனை அடுத்து எழில் அவங்க வந்துட்டாங்க எனக் கூற அவங்கனா யாரு என கோபி கேட்கிறார் அதற்கு ராதிகா தான் என கூறியவுடன் நான் இல்லை நான் சும்மாதான் வந்தேன் என பதர அனைவரும் சிரிக்கின்றனர் இப்படி தன்னை ஏமாற்றி விட்டார்களே என கோபப்பட்டு கோபி அங்கிருந்து செல்கிறார்.
இதனை அடுத்து ராதிகாவின் அம்மா மையூவை அழைத்து பெட்டி உடன் வீட்டிற்கு வர அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதனை பார்த்து விட்டு ஈஸ்வரி இது என்ன சத்திரமா எல்லாரும் வந்து தங்குறாங்க என கூற அதற்கு ராதிகாவின் அம்மா இவள் கோபியோட மகள் எல்லா உரிமையும் இந்த வீட்ல இருக்கு என கூறுகிறார்.
பிறகு ஈஸ்வரி மையூ கோபியின் மகள் கிடையாது எனக் கூற அதற்கு கோபி வாயை திறக்கவில்லை எனவே இதற்கிடையில் மாட்டிக்கொண்டு கோபி படாத பாடு பட்டு வருகிறார் மேலும் ராதிகா மயூவை எதற்கு இங்கு அழைத்து வந்த என தனது அம்மாவிடம் கேட்கிறார். ஒரு கட்டத்தில் ராதிகா தனது அம்மாவை அழைத்துக் கொண்டு ரூமிற்கு செல்ல கோபியும் செல்கிறார்.
நான் தான் இந்த வீட்ல கஷ்டப்படுறனா அவளும் வந்து கஷ்டப்படணுமா என ராதிகா பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி வர ராதிகாவின் அம்மா மயூவையும் ராதிகாவையும் நல்லபடியா பார்த்து சொல்லிவிட்டு கிளம்புகிறார். மையூ வெளியில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி ராதிகாவிடம் மையூ வெளியில் போன் பேசிக்கிட்டு இருக்கா நான் எங்கேயும் போகாத இங்கேயே இரு மேல போனா என்ன கூப்பிடு நான் வரேன் என கூறினேன் வெரி ஸ்மார்ட் கேள் என சொல்ல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காதீங்க என ராதிகா சொல்கிறார்.
அதற்கு கோபி நான் இனியா மேல எவ்வளவு அக்கறையா இருப்பேனு உனக்கே தெரியும் என சொல்ல அப்புறம் ஏன் உங்க அம்மா முன்னாடி என்னுடைய மகள் என கூறவில்லை என சொல்கிறார். அதற்கு நான் ஏன் அவங்க முன்னாடி மையூ என்னுடைய மகள் தான் என நிரூபிக்க வேண்டும் என கூறிப் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் கடுப்பான கோபி இனியா தான் இருக்கா அவளுக்கு நீ அம்மாவா இரு அப்படின்னு நான் உன்ன சொன்னனா நான் அப்படி நினைக்கவும் இல்லை ஆனால் நீ மட்டும் ஏன் என் மேல திணிக்கிற எனக் கூற ராதிகா கோபப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.