அனைவரும் முன்பும் அமிர்தாவை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி.! பாக்கியாவிடம் திமிராக பேசிய மொக்கை வாங்கிய ராதிகா.. பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

baakiyalakshmi-6879
baakiyalakshmi-6879

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நிலா பாப்பா நடனமாட ஒட்டுமொத்த குடும்பமும் அமர்ந்து அதனை பார்த்து மகிழ்ச்சி அடைகிறது. ஈஸ்வரி திடீரென அனைவரும் முன்பும் இவனுக்கு கல்யாணமாகி ஆறு மாசம் ஆகும் இல்ல எதுவும் விசேஷம் இல்லையா என  அனைவரும் முன்பு கேட்க அமிர்தா தலை குனிகிறார் இப்படி அனைவரும் முன்பும் கேட்ப என ராமமூர்த்தி கூற பிறகு நிலா பாப்பாவை எங்களுக்கு போதும் என எழில் சொல்கிறார்.

ஆனால் இப்போதைக்கு இது சரின்னு படும் ஆனால் நடைமுறைக்கு இது சரியானது இல்லை உங்களுக்குனு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என கூறுகிறார் மேலும் கோபி ராதிகாவை திருமணம் செஞ்சுக்கிட்டாலும் இனியா தான் அவனுடைய மகள் எனவே நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் நான் சொல்லும் பொழுது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அப்புறம் யோசிக்கிற மாதிரி ஆயிடக்கூடாதுல எனக் கூறுகிறார்.

இதனை அடுத்து அமிர்தா இனியா படிச்சுக்கிட்டு இருப்பா நிலா பாப்பா போய் அவளை தொந்தரவு செய்வா எனவே நான் போய் பார்க்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்ப அதே போல் ஈஸ்வரியும் நான் உன்னுடைய நல்லதுக்காக தான் சொல்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார். பாக்கியா எழிலை அமிர்தா வருத்தமா இருக்கான்னு நினைக்கிறேன் நீ போய் பார் என சொல்கிறார்.

ஏழில் ரூமுக்கு சென்று அமிர்தாவிடம் இதற்கு மேல் இப்படி யாரும் பேச மாட்டாங்க நீங்கள் மனதிற்குள் தையும் வச்சுக்காதீங்க எனக்கு நிலா பாப்பா தான் மகள் என கூறி பேசுகிறார் பிறகு பாக்கியா ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுக்க செழியன் வந்துட்டானா என கேட்கிறார் இல்லை என பாக்யா சொல்கிறார்.

பிறகு பாக்கியா நீங்க அமிர்தா எழில் குழந்தை பெத்துக்கணும்னு சொன்னது தப்பா இருந்தது அத்தை எனக் கூற அதற்கு ஈஸ்வரி உன்ன மாதிரி யாரு மனசு கஷ்டப்படுமோ என்று பார்த்து எல்லாம் எனக்கு பேச முடியாது என்னதான் எழில் நிலாவ நல்லா பாத்துக்கிட்டாலும் நம்ப முழுசாவல உரிமை கொண்டாடிட முடியாது எனவே அவங்களுக்குன்னு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு மீண்டும் மீண்டும் பாக்கியா இதனை பற்றி பேசிக் கொண்டிருக்க கோபமடைந்த ஈஸ்வரி என்ன நெனச்சுக்கிட்டு இருக்க உனக்கு மட்டும் எல்லாம் தெரியுதுன்னு பேசிகிட்டு இருக்கியா என கூற அந்த நேரத்தில் ராதிகா வெளியில் வந்து ஓட்டு கேட்கிறார் ஈஸ்வரி செழியன் கல்யாணத்துலையும் நீதான் முடிவு எடுத்த, எழில் கல்யாணத்திலும் எல்லாத்தையும் மீறி நீ தான் முடிவு எடுத்த இவ்வாறு எல்லாத்திலேயும் நீ தான் முடிவு எடுக்கணும்னு நினைக்கிறியா நாங்க எதுவுமே சொல்ல கூடாதா? எங்களுக்கு எந்த உரிமையும் இல்லன்னு சொல்றியா இப்போ யாருட்ட என்ன பேசணும் எப்படி பேசணும்னு எனக்கு தெரியும் நீ எனக்கு கிளாஸ் எடுக்காத எனக்கூறி திட்டி வெளியில் அனுப்புகிறார்.

வெளியில் வந்த உடன் ராதிகா பாக்கியாவை பார்த்து நக்கலாக சிரிக்கிறார் பட்டாசு வெடிச்ச மாதிரி சவுண்ட் கேட்டுச்சு செம திட்டா பாக்யா தான் எல்லாம், பாக்கியா இல்லாமல் நான் இல்லை, பாக்யா இல்லாம இந்த வீடே இல்லன்னு  உங்க எக்ஸ் மாமியார் சொல்லுவாங்களே இப்ப என்னடானா இந்த திட்டு திட்டுறாங்க அவங்க என்ன என்ன வேணாலும் சொல்லுவாங்க உங்களுக்கு என்ன வந்துச்சு.

இந்த வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஆனா நீங்க திட்டு வாங்குவதை பார்ப்பதற்கு ஒரு மாதிரி நல்லா தான் இருந்துச்சு அப்படியே உங்க ஆசை மாமியார்கிட்ட வாங்கும்பொழுது குளுகுளுன்னு இருந்துச்சு என பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி கிச்சனுக்கு வருகிறார். இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க என பாக்யாவிடம் கேட்க அதற்கு பாக்யா கிச்சனில் கொஞ்சம் ஜாமா கதுவுற வேலை இருக்குது என்று சொல்கிறார்.

ஒரு மனுஷன் எவ்வளவு தான் வேலை பார்ப்பான் நீ போய் தூங்குமா என சொல்ல உங்களுக்கு ஏதாவது வேணுமா அத்த என்ன பாக்யா கேட்கிறார் அதற்கு எனக்கு எதுவும் வேண்டாம் பாக்கியா ஏதோ கிச்சன்ல சத்தம் கேட்டுச்சு தான் வந்த அதிகமா வேலை செய்ற பாக்கிய அப்புறம் உன் உடம்பு தான் கெட்டுப் போயிடும் போய் தூங்கு என கூறிவிட்டு கிளம்புகிறார். என்னவோ அத்தை என்ன திட்டுறாங்கன்னு சொன்னீங்களே இப்ப பாத்தீங்களா அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு அந்த உரிமைல தான் திட்டுறாங்க அன்பையும் காட்டுறாங்க உங்களுக்காக எல்லாம் புரியாது. போங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க எனக் கூற ராதிகா சரியான பல்பு வாங்கிக்கொண்டு கிளம்புகிறார்.

ரூமில் மயிலுக்கு தூக்கம் வர கோபி தூங்கு என சொல்கிறார் எனக்கு லைட் எரிந்தால் தூக்கம் வராது என சொல்ல இனியா படிச்சிக்கிட்டு இருக்கா இன்னும் கொஞ்ச நேரம் மட்டும்தான் என்ன சொல்கிறார் பிறகு இந்த நேரத்தில் ராதிகா வர லைட் ஆஃப் பண்ணுமாறு கூறுகிறார். இனியா படிச்சுக்கிட்டு இருக்காளா என சொல்ல கோபத்தில் வேண்டுமென்றே கோபியின் கால் மேல் வேகமாக கையை போட வலி தாங்க முடியாமல் கோபி கத்துகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.