விவாகரத்து பெற்ற நிலையில் அதனை கொண்டாடுவதற்காக எழிலை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்ற பாக்யா.! அவளாம் குடும்ப பொண்ணா என கோபத்தில் ஈஸ்வரி..

baakiyalakshmi-1
baakiyalakshmi-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியா கோபிக்கு விவாகரத்து தந்துள்ளார்.இது குறித்து எபிசோடுகள் தான் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு விவாகரத்து பெரும்பொழுது பாக்கியா பஞ்ச் டயலாக் பேசியதால் கோபி கோபப்படைந்து கோட்டிற்கு வெளியே வந்து நீ பெரிய இவளா, உன்னால என்ன பண்ண முடியும், நான் இந்த குடும்பத்திற்காக என் வாழ்க்கையேவே தொலைத்து இருக்கேன் என அவர் கூறி பிறகு இருவரும் சென்றார்கள்.

பிறகு வீட்டிற்கு வந்தவுடன் அனைவரிடமும் உங்க மருமகள் விவாகரத்து தந்து விட்டார் அவளுக்கு பெரிய ராணின்னு மனசுல நினைப்பு அவ்வளவு திமிர் இருக்கா அவளுக்கு எனக்கூறி பல வீர வசனங்களை பேசுகிறார். மேலும் கோபியின் அப்பா எல்லாம் உன்னால் தான் எனக் கூறிய பிறகு ஒரு குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு விவாகரத்து தருவதெல்லாம் நல்லதா என கூறி ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

பிறகு ராதிகா வக்கீலிடம் போன் செய்து கோபியின் விவாகரத்து என்ன ஆச்சு என்று கேட்டதற்கு இன்னைக்கு தெள்ளத் தெளிவாக பேசி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள் எனக் கூறியதும் ராதிகா அதிர்ச்சியடைகிறார். இதனைத் தொடர்ந்து எழில் பாக்யாவிடம் எங்கு போகலாம் என்று கேட்டதற்கு பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு இருக்கும் சிக்கன்,மட்டன் என பல வகையான விரட்டி சாப்பாடுகளை ஆர்டர் செய்கிறார் இதனை பார்த்த எழில் அதிர்ச்சடைகிறார். இன்னைக்கு உனக்கு விவாகரத்து ஆயிருக்கு தெரியும்ல என கேட்க அதுக்கு என்ன இப்போ என பாக்யா கேட்க உன்ன பாக்கவே வித்தியாசமா இருக்குமா என கூறுகிறார் நம்மள சுத்தி இருக்கிறவங்க நல்லா இருக்கணும் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நம்ளை நாமளே மறந்து விடுவோம் என கூறுகிறார்.