விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்யலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் ராதிகாவின் உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் கோபிக்கு டிவோர்ஸ் தந்தாக வேண்டும் என்ற முடிவில் பாக்யா இருந்து வருகிறார்.
அந்த வகையில் கோர்ட்டுக்கு சென்று பஞ்ச் டயலாக்குகளை பேசி எனக்கு கோபி வேண்டாம் என கூறிவிட்டார் எனவே நீதிபதியும் இவர்களுக்கு டிவோர்ஸ் தந்து விட்டார்கள் பிறகு கோபி பாக்யாவிடம் இந்த குடும்பத்திற்காக என்னுடைய ரத்தத்தை சிந்தி உள்ளேன், உங்களுக்கு வேணும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன் உன்னால் எப்படி அவர்களை பார்த்துக் கொள்ள முடியும் என கூறிவிட்டு ராதிகாவை பார்ப்பதற்காக செல்கிறார்.
ராதிகாவின் வீட்டில் அவருடைய அம்மா, அண்ணன் ராதிகாவை இப்பொழுது மும்பைக்கு போக வேண்டாம் கோபியை திருமணம் செய்து கொள்ள எனக்கூறி வருகிறார்கள். இந்த நேரத்தில் கோபி அவர்களின் வீட்டிற்கு வர ராதிகா அதிர்ச்சடைகிறார் பிறகு இன்னும் ஒரு வாரத்தில் டிவோர்ஸ் வந்துவிடும் எனக் கூறுகிறார்.
மேலும் நீங்கள் இப்படி செய்வீங்கன்னு நினைக்கவே இல்லை எனக் கூறிவிட்டு அவள் தான் டிவோர்ஸ் வேணும் என்ன ஒத்த காலில் நின்றால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.நான் எதற்காக டிவோர்ஸ் செய்ய வேண்டும் என முடிவை எடுத்தேன் என உனக்கு தெரியும் எனவே நீ தான் யோசித்து கூற வேண்டும் என கோவில் கூறுகிறார்.ராதிகா பேசுவதை பார்த்தால் கண்டிப்பாக கோபியை ஏற்றுக் கொள்வார் என்பது போல் தான் தெரிகிறது.
மயூரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தற்பொழுது மும்பைக்கு போக முடியாமல் இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பாக்யா எழில் கோர்ட்டில் இருந்து கிளம்பியதும் அடுத்தது எங்கு போவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். தற்பொழுது கோபியை ராதிகா ஏற்றுக் கொள்வாரா இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பது தான் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது ரசிகர்கள் இந்த எபிசோடுகளையும் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.