சமீப காலமாக விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது சன் டிவி சீரியல்கள் அனைத்தையும் ஓவர் டேக்ஸ் செய்து பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. மேலும் தொடர்ந்து பல விறுவிறுப்பான காட்சிகளும் அரங்கேறி வருகிறது.
அதாவது ராதிகா மற்றும் கோபியின் உறவைப் பற்றி பாக்யாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் விவாகரத்து பெறுவதற்காக முடிவு செய்துள்ளார் எனவே கோர்ட்டுக்கு சென்று அங்கு பல பஞ்ச் டயலாக்குகளை பேசி விவாகரத்தை பெற்றுக்கொண்டார்.இதனை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியில் வந்ததும் கோபி நீ என்ன பெரிய இவனு நினைச்சிட்டியா, பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுற இந்த குடும்பத்துக்காக என்னோட ரத்தத்தை சேர்ந்திருக்க உங்களுடைய நல்லதுக்காக இத்தனை நாளாக வாழ்ந்தேன் நீ அனைவரையும் பார்த்தாயா என்ன செய்யப் போறேன் நான் பாக்க தானே போறேன் எனக்கூறி திட்டுகிறார்.
பிறகு எழில் கோபியிடம் அம்மா விவாகரத்து கொடுத்துட்டாங்கன்னு எங்க எல்லாத்தையும் விட்டுட்டு போயி ராதிகாவோட நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறீர்களா? அப்படி நீங்க செஞ்சீங்கன்னா உங்கள நான் கொல்ல கூட தயங்க மாட்டேன் எனக் கூறி மிரட்டுகிறார்.
பிறகு கொல்ல கூட தயங்க மாட்டேன் என கோபியை எச்சரிக்கிறார் இவ்வாறு எழில் கூறியதும் கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்று வருகிறார். பாக்கியாவும் பக்கத்தில் நின்று கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
இப்படி எழில் கூறியுள்ள நிலையில் ஒரு பக்கம் ராதிகாவின் வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி நீ நல்லா இருக்க மாட்டா என மண்ணைவாரி விட்டு வந்துவிட்டார் எனவே ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மேலும் பாக்கியா இதற்கு மேல் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.