பஞ்ச் டயலாக் பேசிய பாக்கியாவிடம் சவால் விட்ட கோபி.! என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கு முக்காடும் பாக்யா..

baakiyalakshmi

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் சில சீரியல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான்.

கோபி மற்றும் ராதிகாவின் உறவைப் பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் தற்போது விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார் எனவே எழிலை அழைத்துக் கொண்டு கோர்ட்டிற்கு போகியுள்ள நிலையில் அங்கே அப்பா வருவாரா என பாக்கியாவிடம் இதில் கேட்க கண்டிப்பாக வருவார் எனக் கூறுகிறார். பிறகு அவர் வரலைன்னா என்ன பண்ணுவ என்று கேட்டதற்கு அத யோசிக்கிற நிலைமையில எல்லாம் நான் அல்ல என கூறுகிறார்.

பிறகு கோபி வந்து விடுகிறார் இருவரும் எதிரெதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது நீதிபதி கோபி மற்றும் பாக்கியாவை அழைக்கிறார். இருவரும் ஒரு மனதாக தான் விவாகரத்து கேட்டீற்களா என்று கேட்டதற்கு இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். நல்லா யோசிச்சு தான் முடிவு செய்தீர்களா இல்லை கவுன்சிலிங் போறிங்களா என்று கேட்பதற்கு பாக்யா அதெல்லாம் வேண்டாம் விவாகரத்து வேண்டும் என கேட்கிறார்.

பிறகு பாக்யவிடம் உங்களுடைய சமதத்துடன் தான் விவாகரத்து செய்ய முடிவெடுத்துகிறார் என்று கேட்டதற்கு இல்லை அவர் விவாகரத்து கேட்டார் நான் கொடுக்கிறேன் எனக் கூறுகிறார். பிறகு தனது வாழ்க்கையில் நடந்த மன வருத்தத்தோடு பாக்கியா தனது வாழ்வில் அனுபவித்த சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் முக்கியம் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பாக்கியா பஞ்ச் டயலாக் பேசுவதை கேட்ட கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு விவாகரத்தை உறுதி செய்தது நீதிமன்றம் இந்நிலையில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பாக்யாவிடம் கோபி உள்ள பஞ்ச் டயலாக் எல்லாம் பேசின உன்னால் தனியா வாழ்ந்து விட முடியுமா.? இப்ப ஏதோ ஒரு கோவத்துல பேசிட்டேன் போகப் போகத்தான் அதனுடைய பிரச்சனை உனக்கு தெரியும் என கூறுகிறார்.

என்ன பழி வாங்கறதா நினைச்சு உன்னை நீயே பழி வாங்குற, எல்லாரும் முன்ன தியாகினு நெனச்சு தல மேல தூக்கி வச்சு கொண்டாடிகிட்டே இருக்காங்க, இந்த குடும்பத்திற்காக நான் ரத்தம் சிந்தி உழைத்து இருக்கிறேன். குடும்பத்தில் எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா அதற்கு நான் தான் காரணம். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.