விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா மற்றும் கோபியின் உறவைப் பற்றி அனைவருக்கும் தெரிய வந்துள்ள நிலையில் கோபி வேண்டாம் என பாக்கியா முடிவெடுத்துள்ளார்.
மேலும் இனியா உள்ளிட்ட பலர் கூப்பிட்டும் வீட்டிற்கு வராமல் இருந்து வந்த பாக்கியம் இன்று கோட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வந்து கிளம்பி எழிலுடன் கோர்ட்டுக்கு செல்கிறார். அனைவரும் டிவோர்ஸ் கொடுக்க வேண்டாம் எனக் கூறினாலும் அவர் விரும்பியதை நான் தர வேண்டும் என வீர வசனம் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து கோபியும் பாக்கியாவின் மேல் மிகவும் கோபமாக இருந்து வருகிறார் பிறகு கோர்ட்டில் பாகியாவிடம் விவாகரத்து பெற விருப்பமா என கேட்க எனக்கு விருப்பம் தான் என கூறி விடுகிறார். சுய மரியாதையை இழந்து இதற்கு மேல் வாழ முடியாது என்னுடைய குழந்தைகளுக்காக என்னுடைய சுய சம்பாதித்தால் என்னால் வாழ முடியும் என கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ஈஸ்வரி கட்டியதால் வீட்டை விட்டு வெளியில் வந்த ராதிகாவிடம் ஒரு குடும்பத்தை உடைத்து விட்டு நீ சந்தோஷமாக வாழலாம் என நினைக்கிறியா என பேசிவிட்டு நீ நல்லா இருக்க மாட்ட என மண்ணை வாரி விடுகிறார்.
எனவே வருத்தத்தில் இருந்து வரும் ராதிகா அடுத்தது என்ன செய்வார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் தற்பொழுது கோபி பாக்யாவும் இல்லாமல் ராதிகாவும் இல்லாமல் என்ன செய்வான் என தெரியவில்லை. கண்டிப்பாக இதற்கு மேல் ராதிகா மையூவை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.