பாகியவை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் எழில்.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்..

bhagya-gopi-serial
bhagya-gopi-serial

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நாடகங்களுள் ஒன்று பாக்கியலட்சுமி இந்த நாடகத்தில் பாக்கியா கோபியின் வீட்டிற்கு செல்கிறார், அங்கு நான் விவாகரத்து செய்ய கோட்டிற்கு செல்ல போகிறேன் நீங்களும் வரவேண்டும் என்று கூறுகிறார் அதற்கு கோபியும் நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறுகிறார்.

பாக்கியா கீழே வந்ததும் செழியன் “நீ விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு சென்றால் நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்” என்று கூறுகிறான். இனியா “நீ விவாகரத்து செய்துவிட்டு சென்றாலும் நான் உன் கூட வரமாட்டேன் எனக்கு அப்பாவும் தான் வேணும், இந்த வீட்ல இருக்குற எல்லாரும் வேணும்” என்கிறாள் இனியா.
மேலும் ஈஸ்வரி என் மேல கொஞ்சமாவது மரியாதை இருந்தா நீ கோர்ட்டுக்கு போகக்கூடாது என்று கூறுகிறார் அதற்கு பாக்கியா உங்கள் மீதி இருந்த மரியாதை அப்படியே தான் இருக்கு, இந்த விஷயத்துல உங்க பேச்சு கேட்காததற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி காலில் விழுகிறார் உடனே ஈஸ்வரி விலகி செல்கிறார்.
அதன் பின் தனது மாமனாரிடம் கூறிவிட்டு எழிலை அழைத்துக் கொண்டு பைக்கில் கோட்டிற்கு கிளம்புகிறார்.இந்த நிலையில் கோபி கீழே இறங்கி வருகிறார், அனைவரும் இதைப் பற்றி கேட்க, அவளுக்கே அவ்வளவு திமிரு இருக்கும்பொழுது எனக்கு இருக்காதா? நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்று திமிராக கூறுகிறார் கோபி, இதைக் கேட்ட வேணு கோபால் “நீ எங்க வேணும்னாலும் போ ஆனா பாக்கியா கிட்ட மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வா” என்று கூறுகிறார், அதற்கு கோபி இது ஒரு பொழுதும் நடக்காது நான் அவளுக்கு விவாகரத்து கொடுக்கதான் போறேன் என்று கூறியதும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

இந்த தருணத்தில் ராதிகா கோபிக்கு கால் செய்து நீங்கள் எப்பொழுது மும்பைக்கு வரீங்க என்று கேட்கிறார் அதற்கு கோபி நான் நாளை வந்து விடுவேன் என்று வாக்கு கொடுக்கிறார், ஒரு வாரம் இருந்துட்டு போகலாமே என்று அனைவரும் கூற இங்கிருந்து இந்த பிரச்சினைகள் எல்லாம் என்னால் பார்க்க இயலாது என்று கூறுகிறார் கோபி, பைக்கில் சென்று கொண்டிருக்கும் பாக்கியா “என்னுடை வாழ்க்கை நீதான் ராதிகா” என்று கோபி கூறியதை நினைத்து பார்ப்பதைப் போல் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.